• Latest News

    November 05, 2016

    19 வருடங்களாக கல்முனையில் இயங்கும் நைட்டா மாவட்டக் காரியலாயம் அம்பாரைக்கு மாற்றம்

    சஹாப்தீன் –
    கடந்த 19 வருடங்களாக கல்முனையில் இயங்கி வரும் நைட்டாவின் (NAITA) மாவட்டக் காரியாலயம் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் அம்பாரைக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான கடிதத்தினை நைட்டாவின் பணிப்பாளர் நாயகம் அனுப்பி வைத்துள்ளார்.
    கல்முனையில் இயங்கிவரும் அம்பாரை மாவட்டக் காரியலாயத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருக்கு 2016.10.24 எனத் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட மாவட்டக் காரியலாயம் வாடகை கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு மாதாந்தம் ரூபா 20ஆயிரம் செலுத்தப்படுகின்றது. இந்நிலையில் அம்பாரை நகரில் நைட்டாவிற்காக சொந்தக் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மாவட்டக் காரியாலயத்தினை எதிர்வரும் 2016.11.15ஆம் திகதிக்கு அம்பாரைக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
    19 வருடங்களாக இயங்கி வந்த ஒரு நிறுவனத்திற்கு நிரந்தரக் கட்டிடமொன்றினை கட்டுவதற்குரிய நடவடிக்கைகளை அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுக்காதிருந்தமையால்தான் நைட்டாவின் மாவட்டக் காரியலாயம் அம்பாரைக்கு செல்லுகின்றது. இதே போலே ஏலவே, கல்முனையில் இயங்கிய அம்பாரை மாவட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் அம்பாரைக்கு மாற்றப்பட்டது.
    இதனை மீண்டும் கல்முனைக்கு கொண்டு வருவோம் என்று சூளுரைத்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள் நைட்டா விடயத்திலும் அறிக்கைகளை விடுவார்கள். ஆறிக்கைகளை நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் என்றுதான் திருந்துமோ?
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 19 வருடங்களாக கல்முனையில் இயங்கும் நைட்டா மாவட்டக் காரியலாயம் அம்பாரைக்கு மாற்றம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top