2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்,
அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்
தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றத்தின் போது
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலருக்கு அமைச்சர் பதவிகளை
வழங்கி அரசாங்கத்துடன் இணைத்து கொள்ளும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு
வருவதாக தெரியவருகிறது.
இதேவேளை இது தொடர்பாக ஏற்கனவே
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் வரவு செலவுத் திட்டம் மீதான
மூன்றாம் முறை வசிப்பின் போது இவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள்
என பேசப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் புதிய அரசியல் கட்சி
ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் பின்னடைவை
சந்திப்பதை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறான கதைகள்
கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர்
கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment