தொகுப்பு சஹாப்தீன் -
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது
அர்ப்பணிப்பினை வழங்கும் வகையில் கராப்பிட்டிய, அம்பாறை மற்றும்
யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் விசேட சிறுவர் பராமரிப்பு
தொகுதிகளை ஸ்தாபிப்பதற்கு ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு
செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். நிந்தவூரில் ஆதார
வைத்தியசாலையினை ஸ்தாபிப்பதற்கு நான் முன்மொழிவதுடன் அதற்காக
ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் கராப்பிட்டிய போதனா
வைத்தியசாலையில் வாய்வழி சுகாதார தொகுதியொன்றினை
உருவாக்குவதற்காக ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் நான்
முன்மொழிகின்றேன்.
இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள
புலமைப்பரிசில்களுக்கான செலவினங்களை ஈடு செய்வதற்கு ரூபா 300
மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
126. சந்தை மற்றும் கைத்தொழில் தேவைகளை நிறைவேற்றுவதற்கு
இரத்தினக்கல் தொடர்பான அறிவு, ஆபரணக் கல் பதித்தல், ஆபரண
வடிவமைப்பு, பெறுமதி மிக்க மாணிக்கக் கல் பட்டைத் தீட்டுதல், பற்றிக்
வேலை மற்றும் மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என்பவற்றில்
தேசிய தொழில்சார் தகைமை (NCQ) மட்டத்தில் பாடநெறிகளை உள்ளடக்கும்
வகையில் தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகங்கள் தமது
பாடவிதானத்தினை விரிவாக்குவதற்கு நான் ஊக்கமளிக்கின்றேன்.
127. அதேவேளை ஆடைக் கைத்தொழில், சுகாதார பராமரிப்பு, மற்றும்
நிர்மாணக் கைத்தொழில் போன்ற துறைகளில் திறமை பெற்ற ஊழியர்களுக்கான
அவசரத்தேவையினை பூர்த்தி செய்வதற்கு, 10,000 இளைஞர்களுக்கு
பயிற்சி வழங்குவதற்காக தனியார் துறையினருக்கு அழைப்பு
விடுக்கின்றேன். இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் இறுதியில் குறித்த
கைத்தொழிலில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தனியார் துறைக்கு
ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு
மாதமொன்றுக்கு 10,000 ரூபாவினை ஒவ்வொரு பயிலுநருக்கும்
உதவுதொகையாக வழங்கும். இதற்காக ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு
செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
128. மாத்தறை ஜேர்மன் பயிற்சி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும்
ஹோட்டல் பயிற்சி பாடசாலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ரூபா 200
மில்லியன்களை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
129. நாட்டில் ஒவ்வொரு நான்கு குடும்பங்களுக்கும் ஒரு கணினி
சொந்தமாகக் காணப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டுக்கும் பயிற்சி
நெறிகளை தகவல்தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி பெற்றுக் கொடுக்க
முடியுமென நான் நம்புகின்றேன்.
இதற்காக களனிப் பல்கலைக்கழகத்தில் தேசிய இலத்திரனியல்
கற்கை மூலவள நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு முன் மொழிவதுடன் 2
வருட காலப்பகுதியில் ரூபா 125 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு
விரும்புகின்றேன். இந்நிலையமானது தனியார் துறையினருடன் இணைந்து
இலத்திரனியல் கற்றல் கையேடுகளை உருவாக்கும். இப் பயிற்சி
நிகழ்ச்சித்திட்டமானது ஏற்றுக் கொள்ளப்பட்ட
சான்றுப்படுத்துதலுடன் மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சித்திட்டம் நிறைவுற்றதுடன் இவ்வாறான பயிற்சி
நிறுவகமொன்றிலிருந்து பெறப்பட்ட ஏதேனும் சிறந்த
சான்றிதழினையொத்த சான்றிதலொன்று வழங்கப்படும்.
சுகாதாரத் துறை
130. சுகாதார சேவையினைச் சேர்ந்தவர் கள் மிகவும்
குறைந்தவளங்களுடன் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது சேவையினை வழங்கி
வருவதுடன் பிரதான சுகாதார சுட்டிகளை அடைந்து கொள்வதில் உயர்
வருமானம் பெறும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு சிறந்த
செயலாற்றுகையினைக் கொண்டுள்ளது என்பதனை நான் இங்கு சுட்டிக்காட்ட
விரும்புகின்றேன். யானைக்கால் நோய் மற்றும் மலரியா போன்றவற்றினை
இல்லாதொழிப்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழினை
பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தமையானது கடந்த பல வருடங்களாக
சுகாதார சேவையினைச் சேர்ந்தவர்களினது அர்ப்பணிப்பு மற்றும் உயர்
தொழில் தகைமை என்பவற்றினை எடுத்துக்காட்டுகின்றது.
131. மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை தாங்கிக் கொள்ள
முடியுமான குறைந்த விலைகளில் கிடைக்கச் செய்வதனை
உறுதிப்படுத்துவதற்கு தேர்தல்களில் நாம் வாக்குறுதியளித்ததைப்
போன்று எமது அரசாங்கம் கடந்த வருடத்தில் தேசிய மருந்துப் பொருட்கள்
ஒழுங்குபடுத்துகை அதிகார சபைச் சட்டத்தினை
அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன்
மூலம் 48 மருந்துப் பொருட்களுக்கான விலையினை அண்ணளவாக 40
சதவீதத்தினால் குறைப்பதற்கு முடியுமாகவுள்ளது. சுகாதாரத்
துறைக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியானது ஒரு சில குறிப்பிட்ட
நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தபட்டமையினால்
அரசாங்கத்திற்கு ரூபா 17,000 மில்லியன் வருமான இழப்பு
ஏற்பட்டுள்ளதை கட்டாயமாக கூற வேண்டியுள்ளது.
இது ஒருபொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் பொதுமக்கள்
மீது தேவையற்ற சுமைகளை சுமத்துவது இல்லை. எமது அரசாங்கம்
வாக்குறுதியளித்ததனை நிறைவேற்றக் கூடியது என்பதனை இது
நிரூபித்துள்ளது.
132. நாட்டில் ஏற்படுகின்ற பெரும்பாலான மரணங்களிற்கு தொற்றா
நோய்கள் காரணமாக இருப்பதுடன் சனத்தொகை மற்றும் நோய் விபரவியலில்
ஏற்படுகின்ற மாற்றங்களினால் நாம் புதிய சவால்களுக்கு
முகங்கொடுத்துள்ளோம். புதிய சவால்களை எதிர்கொள்கின்ற வகையில் எமது
சுகாதார சேவை வழங்கல் முறைமையினை நாம் உறுதிப்படுத்த
வேண்டுமென்பதுடன் மீள் ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது என்பது
தெளிவா கும்.
இந்த வகையில் சுகாதார பராமரிப்பு மறுசீரமைப்புகள் தொடர்பாக
அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கான உயர்மட்டக் குழுவொன்றினை
நியமிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
சுகாதாரத்துறை மனிதவள தரமேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
133. ஏற்கனவே நான் குறிப்பிட்டது போன்று எமது நாட்டில் பலர்
தொடர்ந்து மோசமான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது
வெறுமனே சுகாதார பிரச்சினையொன்றாக மாத்திரமன்றி சமூகப்
பிரச்சினையொன்றாகவும் காணப்படுகின்றது.
சிறுநீரக நோய் தொடர்பான பிரச்சினைகளுக்கு சுகாதார
அமைச்சுக்கு ஏற்கனவே ரூபா 2,225 மில்லியனை ஒதுக்கீடு
செய்துள்ளதுடன் மேலும் 2017 இல் ரூபா 750 மில்லியனை ஒதுக்கீடு
செய்வதற்கு நான் முன் மொழிகின்றேன்.
134. 2016 இல் ஏறக்குறைய ரூபா 23,147 மில்லியனை
வைத்தியசாலைகளின் பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்துள்ளோம். இதில் வெளிநோயாளர்
வார்ட்டுகள், விபத் துச் சேவை வாட்டுகள்,
சத்திரசிகிச்சைக் கூடங்கள், ஆய்வுகூட கட்டடத் தொகுதிகள்
மற்றும் உபகரணங்களைக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகள்
மேம்படுத்தப்படும். 2017 இலும் எமது சுகாதாரத்துறை
உட்கட்டமைப்பில் நாம் தொடர்ந்து முதலீடு செய்யவுள்ளோம். இதற்காக
நாம் ஏற்கனவே ரூபா 25,200 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளோம். தெரிவு
செய்யப்பட்ட மாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சைக் கழிவு முகாமைத்துவ
முறைமையினை தாபித்ததன் மூலம் நோயாளர் நலன்புரி சேவைகளை
வலுப்படுத்துவதற்கு ரூபா 1,000 மில்லியனை நாம் ஏற்கனவே
வழங்கியுள்ளோம்.
135. தாதியர் பயிற்சிக் கல்லூரியை மேம்படுத்துவதற்காக ரூபா 200 மில்லியனை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
136. ஆரோக்கியமானதும் துடிப்பு மிக்கதுமான இளம்
தலைமுறையினரை நாம் பெற்றிருத்தல் வேண்டும். தொற்றல்லா நோயானது
வயோதிபர்களை மாத்திரமன்றி சிறுவர்களுக்கிடையிலும்
காணப்படுவதை நான் நன்கறிவேன். அதேபோன்று தொற்றா நோய்களில்
நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா என்பனவும் பிரதானமாகும்.
பெரும்பாலான தொற்றா நோய்கள் அவை உரிய நேரத்தில்
கண்டுபிடிக்கப்படுமாயின் அவற்றினை தடுப்பது, பராமரிப்பது
அல்லது கட்டுப்படுத்துவது முடியுமானதொன்றாகும். இந்த வகையில்,
ஒவ்வொரு பாடசாலைத் தவணையிலும் நாட்டிலுள்ள ஒவ்வொரு
பாடசாலைகளுக்கும் சுகாதார அதிகாரிகள் விஜயம் செய்வதனை
உறுதிப்படுத்துவதற்கான செயன்முறையொன்றினை உருவாக்குவதற்கு
சுகாதார அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றேன். இந்நோக்கத்திற்காக
ரூபா 50 மில்லியனை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
137.எனவே, நாட்டில் சிறுநீரகநோய் மற்றும் ஏனைய பிரதான தொற்றா
நோய்கள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு வசதியளிப்பதற்காக தேசிய
விஞ்ஞான மன்றத்திற்கு ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு
நான் முன்மொழிகின்றேன்.
138. கொழும்பிலுள்ள சீமாட்டி றிஜ்வே வைத்தியசாலை மற்றும்
கண்டியிலுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை ஆகிய
சிறுவர்களுக்கான விசேட வைத்தியசாலைகள் இரண்டு மாத்திரமே
இலங்கையில் காணப்படுகின்றன. இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு 1,000
குழந்தைகளிலும் 9.9 குழந்தைகள் தமது 5 ஆவது பிறந்த தினத்தினை
கொண்டாடுவதற்கு முன்னரே இறந்து விடுகின்றனர். மிலேனிய
அபிவிருத்தி இலக்குக்கு அமைவாக ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்
இறப்பு வீதமானது 1,000 இற்கு 4 ஆக காணப்பட்டதுடன் நிலையான
அபிவிருத்தி இலக்கானது ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களின்
இறப்பு
வீதத்தினை பூச்சிய வீதமாக மாற்றியமைக்
கும்.
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது
அர்ப்பணிப்பினை வழங்கும் வகையில் கராப்பிட்டிய, அம்பாறை மற்றும்
யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் விசேட சிறுவர் பராமரிப்பு
தொகுதிகளை ஸ்தாபிப்பதற்கு ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு
செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். நிந்தவூரில் ஆதார
வைத்தியசாலையினை ஸ்தாபிப்பதற்கு நான் முன்மொழிவதுடன் அதற்காக
ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் கராப்பிட்டிய போதனா
வைத்தியசாலையில் வாய்வழி சுகாதார தொகுதியொன்றினை
உருவாக்குவதற்காக ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் நான்
முன்மொழிகின்றேன்.
139. காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலையை நவீன தொழில்நுட்ப
வசதிகளுடன் நாம் 2017 ஆம் ஆண்டில் மேம்படுத்துவோம். நாட்டிலுள்ள
இலவச சுகாதார வைத்திய துறை வசதிகள் அரச தனியார் பங்குடமை முறையின்
கீழ் ரூபா 3,000 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்படும்.
140. தலசீமியா, லிம்போமா, லிவ்கேமியா மற்றும் ஏனைய அவ்வாறான
நோய்களை கட்டுப்படுத்துவதற்கு கண்டி வைத்தியசாலையில் எலும்பு
மச்சை மாற்றுச் சிகிச்சை அலகொன்றினை ஸ்தாபிப்பதற்கு ரூபா 500
மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
141. சுகாதார நலன்புரி சேவையில் தகவல் தொழில்நுட்பத்தினை
பயன்படுத்துவது கட்டாயமானதாகும். எனவே, தொலை மருத்துவ
நிகழ்ச்சித்திட்டமொன்றினை அபிவிருத்தி செய்வதற்கு தகவல்
தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட ஆகக் குறைந்தது 5
ஆதார வைத்தியசாலைகளை நான் ஊக்குவிக்கவுள்ளேன்.
142. கிராமிய மட்டத்தில் பொது சுகாதார முறைமையை
உறுதிப்படுத்தும் நோக்கில் பொதுச் சுகாதார தாதிகளை நாம்
தேவைக்கேற்றவாறு வேலைக்கமர்த்துவோம்.
143. வரவு – செலவுத்திட்டத் தயாரிப்பின் போது இடம்பெற்ற எனது
கலந்துரையாடல்களின் போதுநாட்டில் தற்பொழுது போதுமான
எண்ணிக்கையில் சுகாதார மற்றும் போசனை நிபுணர்கள் இல்லையென்பதை
அறிந்து ஆச்சரியமடைந்தேன். அடுத்த மூன்று வருடங்களுக்குள் சுகாதார
மற்றும் போஷாக்கு பணியாளர்களின் எண்ணிக்கையினை 300 ஆக
அதிகரிப்பதற்கு நான் முன்மொழிவதுடன் அதற்காக ரூபா 50 மில்லியனை
ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன்.
144. அரசாங்க வைத்தியசாலைகளில் தனியார் துறையுடன் இணைந்து
கட்டணம் செலுத்துகின்ற வார்ட்டுகளை ஸ்தாபிப்பதற்கு
முன்மொழிவதுடன் அரசாங்க வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை
ஆய்வுகூடங்களை ஸ்தாபிப்பதற்கும் தனியார் துறைக்கு அழைப்பு
விடுக்கின்றேன்.
145. நாட்டில் பதிவு செய்யாத மருந்து விற்பனை நிலையங்கள் பெரும்
எண்ணிக்கையில் காணப்படுவதுடன் தகைமை பெறாத மருந்தகர்களும்
குறிப்பிடத்தக்களவு காணப்படுகின்றனர்.
இந்நிலைமையினை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வருதல் வேண்டும். இந்த 29 வகையில் அனைத்து மருந்து விற்பனை நிலையங்களும்
தேசிய மருந்துப் பொருட்கள் அதிகார சபையின் கீழ் உடனடியாக பதிவு
செய்யப்படுதல் வேண்டுமென்பதுடன் இதற்குக்
கட்டுப்படாதவர்களுக்கு 100,000 ரூபா அபராதமாக விதிக்கப்படும்.
146. ஆயுர்வேத மருத்துவத் துறையில் ஆராய்ச்சி மற்றும்
அபிவிருத்தி நோக்கத்தினை மையமாகக் கொண்டு ஆயுர்வேத மருத்துவ
பட்டப்பின்படிப்பு நிறுவகத்தினை வலுப்படுத்துவதற்கு ரூபா 250
மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
147. நாட்டில் இலவச சுகாதார பராமரிப்புத் சேவை வழங்கல்
முறைமையின் தரத்தினை உறுதிப்படுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன்
இருக்கின்றோம்.
இத்துறைக்கு நிதிக்கு மேல் நிதியினை வாரி வழங்கிய போதிலும்,
பொது மக்கள் அவற்றின் தொகையினை அறிவார்கள் என்பதில் எனக்குச்
சந்தேகமுள்ளது. எனவே, ஒவ்வொரு நோயாளியும் அரசாங்க
வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறும் போது அவர்களது நோயினை
குணப்படுத்துவதற்காக அரசினால் அவர்களுக்காக செலவிடப்பட்ட
தொகையினை சுட்டிக்காட்டுகின்ற செலவினப் படிவமொன்றினை
வழங்குவதற்கு நான் சிபாரிசு செய்கின்றேன்.
இலங்கையில் வியாபாரம் மேற்கொள்வதை இலகுபடுத்தல்
148. எமது அரசாங்கம் ஆகக் குறைந்தளவு சிவப்பு நாடாக்களுடன்
வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு முடியுமான சூழலினை
உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது. தற்பொழுது
நாம் இலகு வியாபாரம் புரிதல் சுட்டியில் 110 ஆவது இடத்தில்
இருக்கின்றோம் என்பதனை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள
விரும்புகின்றேன். இந்நாட்டில் வியாபாரமொன்றினை பதிவு செய்வதற்கு
முன்னர் வியாபாரமொன்று பின்பற்றப்படவேண்டிய ஆகக் குறைந்தது 8
படிமுறைகள் காணப்படுகின்றன. இது இத்துறையில் முன்னணியில்
திகழ்கின்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சராசரித் தேவைக்கு
அதிகமானதாகும்.
இதனை 2020 ஆம் ஆண்டளவில் 5 செயன்முறையாகக் குறைப்பது எமது
நோக்கமாகும். இதனுடன் வேறு ஏனைய பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக
2018 ஆம் ஆண்டளவில் உலகில் 70 ஆவது இடத்தில் எம்மை இருக்குமளவுக்கு
செய்ய முடியும்.
149. இந்த வகையில் கம்பனிகள் பதிவாளரினை வாரத்தில் 7
நாட்களும் தொழிற்பாட்டுக்காக திறப்பதற்கு நான் முன்மொழிவதுடன்
அந்நோக்கத்திற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் தொழில்
திணைக்களம் என்பவற்றினை வலுப்படுத்துவதற்கும் முன்மொழிகிறேன்.
இதன்மூலம் வியாபாரமொன்றினை ஆரம்பிப்பதற்கான காலத்தினை 10
நாட்களிலிருந்து 4 நாட்களாக குறைப்பதற்கு முடியும்.
150. அனைத்து வியாபாரங்களும் பதிவு செய்வதற்குத்
தேவைப்படுத்துகின்ற தேசிய வியாபார பதிவு அலுவலகமொன்றை ஸ்தா
பிப்பதற்குத் தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நான்
முன்மொழிகின்றேன். எமது நாட்டினால் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக
உடன்படிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதனை
உறுதிப்படுத்தும் பணிக்காக தேசிய வியாபார வழக்குத் தொடுநர் ஒருவரினை
நியமிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். தேசிய வியாபார பதிவகம்
மற்றும் வர்த்தக வழக்குத் தொடுநரின் அலுவலகம் என்பவற்றினை
ஸ்தாபிப்பதற்கு ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான்
முன்மொழிகின்றேன்.
151. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் மிக விரைவாக
கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில்
பாதுகாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் சட்டத்திற்கான திருத்தங்களை
நாம் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
152. முதலீடுகளைக் கவருவதற்கு தெளி வான காணிக் கொள்கையொன்று
அவசியமாகும். இந்தவகையில், காணிகளின் உரித்தினை எவ்வித
நிபந்தனையுமின்றி வரையறுக்கப்பட்ட பொது கம்பனிகளுக்கு
வழங்குவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நான்
முன்மொழிகின்றேன். பெரும்பான்மையான வெளிநாட்டு பங்குகளைக் கொண்ட
தனியார் கம்பனிகள் காணிகளை நீண்டகால அடிப்படையில் குத்தகைக்குப்
பெறுவதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
எவ்வாறாயினும், அத்தகைய கம்பனிகள் ஆகக் குறைந்தது 150 பேருக்கு
வேலை வாய்ப்பினை வழங்குவதுடன் ரூபா 250 மில்லியனை (காணியின் பெறுமதி
நீங்கலாக) முதலீடு செய்து குறித்த அந்தஸ்தினை ஆகக் குறைந்தது 3
வருடங்களுக்கு பேணி வருதலும் வேண்டும். அவ்வாறு, இல்லாதுவிடின் 3
வருட இறுதியில் ஒப்பந்தத்தினை நிறைவேற்றாமைக்காக குத்தகைக்கான
100 சதவீதம் உடனடியாக அறவிடப்படும். அத்தகைய குத்தகைப்
பெறுமதியானது காணியின் சந்தைப்பெறுமதியில் அரச விலை
மதிப்பீட்டாளரினால் தீர்மானிக்கப் படும்.
153. தற்பொழுது வழக்கிலுள்ள 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க
கம்பனிகள் சட்டத்திற்கு அமைவாக, 70 வயதையடைந்த தலைவர் மற்றும்
பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அத்தகைய சபையில் பணியாற்ற முடியாது
எவ்வாறாயினும், பணிப்பாளர் சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்
றும் உரிமையாளர்கள் 70 வயதினையும் தாண்டி பணிப்பாளர் சபையில்
தொடர்ந்து சேவையாற்றுவதற்கு முடியுமான வகையில் இவ்வரையறையினை
நீக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
154. நிதித்துறையில் உறுதியான ஒழுங்கபடுத்துகை
செயன்முறையொன்று காணப்பட்ட போதும் பொருளாதார செயற்பாடுகளில்
ஈடுபடுவதற்கான ஆற்றலினை நீதிக் குப் புறம்பான முறையில்
வழங்கமுடியாது என்பதனை நாம் நம்புகின்றோம்.
இந்த வகையில், ரூபா 500,000 கடன் வரையறைக்குட்பட்ட கடன்
பெறுநர்களின் கடன் வரலாற்றினை வழங்காதிருக்குமாறு கடன் தகவல்
பணியகத்திற்கு நான் வேண்டு கோள் விடுக்கின்றேன்.
155. கடனிறுக்க வகையின்மை மற்றும் வங்கரோத்து நிலை தொடர்பாக
நாட்டில் காணப்படும் சட்டங்களை நவீன கால நடைமுறைகளுக்கேற்ற வகையில்
திருத்துவதற்கான தேவை காணப்படுவதனால் பொருத்தமானதும்
வினைத்திறன் மிக்கதுமான சட் டங்களை உருவாக்குவதற்கு நாம்
நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
156. வரவு – செலவுத்திட்ட கலந்துரை யாடல்களின் போது, பல
வியாபாரிகள் தமது கடைகளை ஆகக் குறைந்தது இரவு 11 மணி வரைக்கும்
திறந்திருப்பதற்கு விரும்புவதாக தமது கருத்தை தெரிவித்தனர்.
தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கமும் இரவு 11.00 மணியின் பின்னர்
பேருந்து சேவைகளை வழங்குவதன் மூலம் இதற்கு ஒத்துழைப்பு வழங்க
உடன்பட்டிருப்பதனால் குறித்த கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு
நான் ஊக்கமளிக்கின்றேன்.
157. முறையற்ற கொடுக்கல் வாங்கல்க ளில் இருந்து நாட்டின்
வெளிநாட்டு ஒதுக் குகளை பாதுகாக்கும் முகமாக செலாவணி
கட்டுப்பாட்டுச் சட்டம் நீக்கப்பட்டு வெளி நாட்டுச் செலவாணி சட்டம்
அறிமுகப்படுத்தப்படும்.
வலுப்படுத்தப்பட்ட, சிறந்த கொடுப்பனவு வழங்கப்பட்ட ஊழியப்படை
158. ஊழியப்படையில் மூன்றிலொரு பகுதியினர் முறைசார்
துறைகளில் ஈடுபட்டுள்ளதுடன் எஞ்சிய மூன்றிலிரண்டு பகுதியினர்
முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ளனர். முறைசார் துறையானது தொழில்
சட்டங்களினால் மிகவும் பாதுகாக்கப்பட்டதுடன் அதில் நெகிழ்வான பணி
நேரங்கள், பகுதிநேர வேலை அல்லது 45 மணித்தியாலங்கள் மற்றும்
வாரத்தில் ஐந்தரை நாட்கள் சேவையில் ஏதேனும் மாற்றங்கள் என்பன
காணப்படமாட்டாது.
அதற்கு மாற்றமாக ஊழியப்படையில் பெரும்பாலானவர்கள்
முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் தொழில்
சட்டங்களிலிருந்து எவ்வித பாதுகாப்பையும் பெற்றிருக்கவில்லை.
இந்த வகையில் எமது ஊழியப்படையில் பெரும்பாலானவர்கள்
இந்நாட்டிலுள்ள இறுக்கமான தொழில் சட்டங்களிலிருந்து எவ்வித
நன்மையினையும் பெற்றுக்கொள்வதில்லை.
159. தற்பொழுது நடைமுறையிலுள்ள தொழில் சட்டங்கள் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதமாகக் காணப்படும் சேவைத் துறையின்
கேள்வியினை ஈடு செய்வதற்கான சவால்களை எம்மில்
ஏற்படுத்தியுள்ளதுடன் அடுத்த சில வருடங்களில் சுற்றுலா மற்றும்
தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் துறையினை பிரதான வளர்ச்சி
ஊக்குவிப்பாளர்களாக பதிவு செய்வதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
நவீன சேவைத் துறையில் எமது போட்டி பயன் வழங்கப்பட்டுள்ளதுடன்
நாட்டுக்குள் அறி வுச் செயன்முறை வெளியார் சேவை (KPO), நீதிச் செயன்முறை
வெளியார் சேவை (LPO) மற்றும் வியாபார செயன்முறை வெளியார் சேவை (BPO)
கைத்தொழில்களை கவர்கின்ற அளவு நாம் சிறந்த இடத்தில்
காணப்படுகின்றோம். எவ்வாறாயினும், அறிவுச் செயன்முறை வெளியார் சேவை
மற்றும் வியாபாரச் செயன்முறை வெளியார் சேவை ஆகிய இரண்டு
தொழிற்றுறைகளும் இரவு நேர வேலை, பகுதி நேர வேலை மற்றும் வீட்டுடன்
கூடிய வேலை என்பன போன்ற நெகிழ்வுப் போக்கான வேலை மணித்தியாலங்களை
தேவைப்படுத்துகின்றன. தகவல் தொழில்நுட்ப மற்றும்
சுற்றுலாத்துறையின் சம்பளங்கள் ஏற்கனவே உயர் மட்டத்தில்
காணப்படுவதுடன் உரிய வளர்ச்சிப் போக்கினையும் காட்டுகின்ற அதேவேளை
சம்பளங்களை மாத்திரம் உயர்ந்த போக்கில் காணமுடியுமாகவுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் வாய்ப்புகள் என்பன
குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்திருப்பதனை நாம் ஏற்றுக்
கொள்ளுதல் வேண்டும். எவ்வாறாயினும், சேவைத்துறையில் தொழில்நுட்ப
ரீதியில் குறிப்பிடத்தக்க ஆற்றலினை வெளிப்படுத்துவதற்கு
தொழில்சட்டங்களுக்கான திருத்தங்கள் அத்தியவசியமானவையாகும்.
அத்தகைய திருத்தங்களினை மேற்கொள்ளும் போது தொழில் பாதுகாப்பு
தொடர்பில் எவ்வித விட்டுக்கொடுப்பும் காணப்படமாட்டாது என்பதுடன்
சிறந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்ற புதிய தொழில்கள் வழங்கப்படும்
அதேவேளை அவற்றில் எமது இளைஞர், யுவதிகளை நாம் ஈடுபடுத்த முடியுமென
உங்களுக்கு உறுதி வழங்குகின்றேன். தேசிய தொழிற்சங்க பேரவையின்
ஒத்துழைப்பினை நான் பாராட்டுவதுடன் ஊழியர்கள் மற்றும் தொழில்
வழங்குநர்கள் ஆகிய இரு சாராரும் உடன்படும் வகையில் தொழில் சட்டங்களை
திருத்துவதற்கு அவர்கள் சிபாரிசுகளை வழங்கினர்.
அ. தனியார் துறையினருக்கு 45 மணித்தியாலங்கள் மற்றும்
வாரத்தில் 5 நாட்கள் அதேவேளை அரசாங்கத்துறைக்கு வாரத்தில் 40
மணித்தியாலங்கள் என்ற நெகிழ்வுபோக்குடைய வேலை நேரங்கள்,
ஆ. ஒப்பந்த தொழில்கள் 6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்திற்கு விரிவாக்கப்படும்.
இ. செயலாற்றுகையினை அடிப்படையாகக் கொண்ட வேதனாதிகள்.
160. பாதுகாப்பு, துப்பரவேற்பாடு, சிற்றுண்டிச் சாலைகள்
மற்றும் போக்குவரத்துச் செயற்பாடுகளுக்கு மாத்திரம் மனிதவள
சேவைகளை வரையறுப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
161.ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் தொழில்
திணைக்களம் என்பவற்றினால் வெவ்வேறான தரவுத் தளங்களை
பராமரிப்பதனால் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. ஆகவே
முன்மொழியப்பட்டுள்ள மத்தியப்படுத்தப்பட்ட ஓய்வூதிய
நிதியத்தின் மூலம் ஊழியர்களது தரவுத் தளங்கள்
ஒழுங்குபடுத்தப்பட்டு மேலும் வலுப்படுத்தப்படுமென நாம்
உறுதியளிக்கின்றோம்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி
162. சிறிய மற்றும் நடுத்தர தொழில்
முயற்சித் துறையானது பொருளாதாரத்தில் 50
சதவீதமாகக்காணப்படுவதுடன் வளர்ச்சியின் பிரதான காரணியாகவும்
காணப்படுகின்றது. இத்துறையின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியானது
வரையறுக்கப்பட்ட நிதிக் கிடைப்பனவினால் மிகவும் மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.
நிதியியல் அடிப்படை வியாபாரத் திட்டத்திற்கு மாற்றமாக
பாரம்பரிய பிணையினை அடிப்படையாகக் கொண்ட நிதியீட்டல்
எண்ணக்கருவினை தொடர்ந்தும் வங்கிகள் பின்பற்றி வருவதனால் இந்நிலை
ஏற்பட்டுள்ளது. இந்த வகையில், பிணைப்பொறுப்பற்ற வகையில் சிறிய
மற்றும் நடுத்தர தொழில் முயற்சித்துறைக்கு சிறந்த நிதியீட்டத்திற்கு
ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி
கடன் உத்தரவாதத் திட்டமொன்றினை நாம் ஏற்கனவே
ஆரம்பித்துள்ளதுடன் அதற்கான ஆரம்ப முதலீடாக ரூபா 500 மில்லியனை
ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். இத்திட்டத்தின
வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியானது
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பாக 100 மில்லியன் ஐ.அ.டொலரினை வழங்கும்.
இதற்கு மேலதிகமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் துறைக்கு
கடன் வழங்குவதற்காக வங்கிகள் அவற்றின் கடன் அளவில்
ஆகக் குறைந்தது 10 சதவீதத்தினை வழங்குமாறு நாம் வங்கிகளுக்கு பணிப்புரை வழங்குகின்றோம்.
163. விவசாயம், கடற்றொழில், கால்நடை, மலர்ச்செடி வளர்ப்பு,
வீட்டுத் தோட்டச் செய்கை, மென்பொருளியல், அச்சுத்தொழில் சுற்றுலா,
கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைத் தொழிற்றுறை என்பவற்றில் ஈடுபட்டுள்ள
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு குறித்த
தொழிற்றுறையின் புரள்வு மற்றும் ஊழிய உருவாக்க ஆற்றல் என்பவற்றில்
தங்கியுள்ள சலுகைக் கடன் திட்டத்தினை வழங்குவதன் மூலம் ஒத்துழைப்பு
வழங்கப்படும். ரூபா 25 மில்லியன் முதல் ரூபா 250 மில்லியன் வரையான
புரள்வினையும் 10 50 ஊழியர்களையும் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர
தொழில் முயற்சியொன்றுக்கு வட்டி மானியமாக 50 சதவீதம்
வழங்கப்படுவதுடன் ரூபா 250 மில்லியன் - ரூபா 750 மில்லியன் வரையான
புரள்வினையும் 50 300 ஊழியர்களையும் கொண்ட தொழில்
முயற்சியொன்றுக்கு 25 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ரூபா 750 மில்லியனை
ஒதுக்கீடுசெய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
164. ஒரு காலத்தில் சிறப்புற்று விளங்கிய ஆடை மற்றும் கைத்தறி
கைத்தொழிலினை உள்நாட்டுச் சந்தையில் குறிப்பிடத் தக்கதாகவும் பல
தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியதாகவும் மீண்டும் எழுச்சி பெறச்
செய்வதற்கு நாம் ஆர்வத்துடன் இருக்கின்றோம். இந்த வகையில் கைத்தொழில்
அபிவிருத்திச் சபையினூடாக பயிற்சி மற்றும் தேவையான உட்கட்டமைப்பு
வசதிகளை வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. சிறிய
மற்றும் நடுத்தர தொழில் முயற்சிதது் றைக்கு ஒத்துழைப்பு வழங்கும்
வகையில் தேவையான அறிவு மாற்றல் மற்றும் கைத்தொழில் பேட்டைகளை
தரமுயர்த்துவதற்கு தேவையுடைய கைத்தொழிலாளர்களுடன் தமது
ஈடுபாட்டினை அதிகரிப்பதற்கு கைத்தொழில் அபிவிருத்திச் சபையிடம்
வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்நோக்கத்திற்காக ரூபா 500 மில்லியனை
ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றேன்.
165. ஒதுக்கப்பட்ட செப்பு, பித்தளை மற்றும் உருக்கு கைத்தொழிலில் 300,000 இற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் சிறியளவிலான தொழில்முயற்சியாளர்கள் என்பதுடன் சர்வதேச விலைத் தளம்பல் காரணமாக சேகரிக்கப்பட்ட கழிவு உலோகப ் பொருட்களை விற்பனை செய்வதில் மிக மோசமான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். கழிவிரும்பு சேகரிப்பாளர்களுக்கு சர்வதேச விலைகளுக்கேற்ப நியாயமான விலையினை வழங்குமாறு உள்நாட்டு உருக்கு உற்பத்தியாளர்களிடம் வேண்டுவதுடன், அவற்றுக்கான பெறுமதி சோ்ப்பினை ஊக்குவிப்பதன் மூலம் அவற்றினை மூலப் பொருளாக ஏற்றுமதி செய்வதனை குறைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
166. உள்நாட்டு கலைஞர்களின் கைவேலைகளை காட்சிப்படுத்துவதில் லக்சல பிரதான பங்கு வகிப்பதற்கு நான் ஊக்கமளிக்கின்றேன். தற்பொழுது இந்த உள்நாட்டு கலைஞர்கள் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். எனவே, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் இக்கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளதனால் அவர்களுக்கான கொடுப்பனவுகளை ஆகக் குறைந்தது ஒரு மாதக் காலப்பகுதிக்குள் வழங்குவதனை உறுதி செய்யுமாறு நான் லக்சலவினை வேண்டிக் கொள்கின்றேன்.
167. மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள குறிப்பாக கைவினைப் பொருட்கள், ஆடை மற்றும் பாதணித் தயாரிப்புக் கைத்தொழில்களைப் புரியும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வசதியளிப்பதற்காக அரச தனியார் பங்கேற்புடன் கொழும்பில் பிரத்தியேக கைவினை சந்தைப்படுத்தல் நிலையம் ஒன்றினை தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
168. கூரையோடு மற்றும் தரையோட்டுக் கைத்தொழிலானது 375,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளதுடன், நாட்டில் காணப்படுகின்ற பல்வேறு சட்ட விதிகளினால் அதன் மூலப்பொருளான களிமண்னைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. அதிமேதகு சனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டவாறு, இப் பிரச்சினையினை ஆராய்வதற்கு அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரம் மிக்க குழுவொன்று நியமிக்கப்படும். பெறுமதி சோ்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தினை உறுதிப்படுத்துவதற்கு மினுக்கப்படாத ஓடுகளுக்கு பெறுமதி சோ்ப்பதற்கான துணை நிறுவனங்களின் சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு ஊக்கமளிக்கின்றேன்.
169. எமது நாடு கடலால் சூழப்பட்ட தீவொன்றாக இருப்பினும், உப்பினை இறக்குமதி செய்வது விந்தையானதொன்றாகும். இதனால், அரச தனியார் பங்கேற்பின் மூலம் இத்துறைக்கு அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
170. இலங்கை மத்திய வங்கியினால் தொழிற்படுத்தப்படும் சௌபாக்கிய மற்றும் ஸ்மைல்ஸ் போன்ற சலுகைக்கடன் மற்றும் உத்தரவாதத் திட்டங்கள் அனைத்தையும் ஏனைய கடன் திட்டங்களுடன் இணைக்கும் வகையில் 2017 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் திறைசோிக்கு மாற்றப்படும். முதலீடுகள்
171. கௌரவ சபாநாயகர் அவர்களே, முதலீடுகள் நிலையான வளர்ச்சி மற்றும் அதனைப் பேணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்த தசாப்தத்தில் முதலீடுகள் மொ.உ.உற்பத்தியில் 30.1 சதவீதமாக பேணப்பட்டுள்ள போதிலும், அதன் பெருமளவிலான பகுதி அரசாங்கத் துறையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் விளைவாக நாட்டில் படுகடன் சுமையானது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியில் 76 சதவீதமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேவேளை, தனியார் துறை முதலீடுகள் எவ்வித வளர்ச்சியுமின்றி காணப்படுகின்றது. எவ்வாறாயினும் பாரிய கடன் சுமையின் மூலம் எமது அரசிறைத் துறையானது நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுடன் தொடர்ந்து படுகடன் சுமையினை அதிகரிப்பது சிறப்பாகவிருக்குமென நான் நினைக்கவில்லை. தனியார் துறை முதலீடுகளுக்கு வசதியளிப்பதுடன் தனியார் மற்றும் அரசாங்கத்துறை என்பவற்றுக்கிடையில் பங்கேற்பினை ஏற்படுத்துவதுமே இதற்கான மாற்றீடாகும். பெறுமதி சோ்ப்பு மற்றும் தொழில் உருவாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ள துறைகளில் முதலீடுகளை நாம் ஊக்குவித்தல் வேண்டும். விவசாயம், உற்பத்தித் துறை, கடற்றொழில், அலங்கார மீன் வளர்ப்பு, சூரிய கலங்களின் தயாரிப்பு, கால்நடை, கோழி வளர்ப்பு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவிருக்கின்றோம்.
172. இதற்காக வேண்டி, இலங்கைக்கு அதிகளவான முதலீட்டு வசதிகளை பெற்றுத் தரக்கூடிய அபிவிருத்திக்கான முகவராண்மையினை நாம் தாபிப்போம். எவ்வாறாயினும், முதலீடு தொடர்பான எந்தவொரு தீர்மானமும் 50 நாட்களுக்கு அதிகமான காலத்தினை தேவைப்படுத்துவதுடன் அத்தகைய முதலீடுகள் மற்றும் கருத்திட்டங்கள் மேலதிக செயன்முறைகளுக்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு பாரப்படுத்தப்படும்.
173. அதேவேளை, திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சானது நாட்டில் மேற்கொள்ளப்படும் பிரதான முதலீடுகளுக்கான ஊக்குவிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக திறைசோிக்கு சிபாரிசினை வழங்கும்.
174. எமது அரசாங்கமானது சொத்துக்கள் மற்றும் வருமானத்தின் சமமான பகிர்வு உருவாக்கத்தினை உறுதிப்படுத்துகின்ற பொருளாதாரக் கொள்கையொன்றினை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவுள்ளது. தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வடக்கு, கிழக்கு மற்றும்
ஊவா மாகாணங்களில் மிகக் குறைவாகக் காணப்படுவதுடன் இந் நிலைமையினைச் சீராக்குவதற்கு குறிப்பிடத்தக்களவு முயற்சி தேவைப்படுகின்றது. இதற்காக வட மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்கின்ற வியாபார முயற்சிகளுக்கு 200 சதவீத மூலதனக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 3 மில்லியன் ஐக்கிய அமொிக்க டொலர்களுக்கு அதிகமான (காணி தவிர்ந்த) முதலீடுகளை மேற்கொளவ் துடன் புதிய தொழில்வாய்ப்புகள் 250 இனை உருவாக்குகின்ற வியாபார தொழில் முயற்சிகளுக்கு 100 சதவீத மூலதனக் கொடுப்பனவை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். முறையே 500 அல்லது 800 புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முயற்சிகளுக்கு 3 அல்லது 5 வருடங்களுக்கு 50 சதவீத வரி விடுமுறையும் வழங்கப்படும்.
175. கௌரவ சபாநாயகர் அவர்களே, அதிக தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியதாக முதலீடுகளில் அரசாங்கம் என்ற வகையில் பங்காளராக இருப்பதற்கு நாம் பின்நிற்பதில்லை என்பதுடன் ஆபத்தினை பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கின்றோம். இந்த வகையில் 5 100 மில்லியன் ஐ.அ.டொ (காணி பெறுமதி நீங்கலாக) முதலீடுகளைக் கொண்ட ஏதேனும் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டுக் கம்பனியொன்று 40 சதவீதத்திற்கு அதிகமான பெறுமதி சோ்ப்பினை கொண்டிருப்பதுடன் 500 வேலை வாய்ப்பையும் கொண்டிருப்பின் தொழிற்பாட்டினை ஆரம்பித்துஇரண்டு வருட இறுதியில் முதலீட்டில் 5 சதவீதம் கொடையாக வழங்கப்படும். இந் நிலைமை 5 வருடங்களுக்கு பேணப்படுமாயின் அரசாங்கம் முதலீட்டினை ஆரம்ப முதலீட்டின் 5 சதவீதத்தினால் மேலும் அதிகரிக்கச் செய்யும். அத்தகைய வியாபார நிறுவனங்களுக்கு 100 சதவீத மூலதனக் கொடுப்பனவினையும் நாம் வழங்கவுள்ளோம்.
176. ஐ.அ. டொலர் 100 500 மில்லியனுக்கு அதிகமான பிரதான முதலீடுகளுக்காகவும் ஐ.அ. டொலர் 500 மில்லியனுக்கு அதிகமான முதலீடுகளும் எமது திட்டத்தினை மாற்றியமைப்பதுடன் வரி விடுமுறைகளுடன் விசேட ஊக்குவிப்பு பொதியொன்றினை நாம் வடிவமைக்கவுள்ளோம்.
177. அவர்களது வியாபாரங்கள் மற்றும் முதலீடுகளின் தொழிற்பாட்டுக்கு வசதியளிக்கும் வகையில், அத்தகைய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நிபுணத்துவம் மிக்க ஊழியர்களுக்கு 5 வருட பல்நுழைவு வீசா ஒன்றினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
178. குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்கினைப் பதிவாக்கியுள்ள நிர்மாணக் கைத்தொழிற்றுறைக்கு உத்வேகம் வழங்கும் வகையில், முன் பொருத்தப்பட்ட கட்டமைப்புகளுக்கு ஏற்புடையதான 25 சதவீத செஸ் வரியினை நீக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
179. கௌரவ சபாநாயகர் அவர்களே, உற்பத்தித்திறன் அதிகரிப்பு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் மூலம் மூலதன உள்ளீடானது எமது வியாபாரங்களுக்கு வலுசோ்ப்பதாகும். எனவே, எமது வியாபார தொழில்முயற்சிகளின் ஆற்றலினை மேம்படுத்துவதற்கு கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்படும் உயர் தொழில்நட்ப, தன்னியக்க இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது துறைமுக மற்றும் விமான நிலைய அறவீட்டுக்கு 75 சதவீத விலக்களிப்பினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
180. தற்பொழுது வௌிநாட்டு முதலீடுகளில் உள்நாட்டுக் கம்பனிகளினால் பெறப்படும் மூலதனப் பெறுகைகள் உடனடியாக இலங்கை ரூபாவுக்கு மாற்றப்படுதல் வேண்டும். இக் கம்பனிகள் மூலதனத்தினை பெற்றுள்ளன என்ற வகையில் அத்தகைய உள்நாட்டு கம்பனிகள் பெற்றுக் கொண்ட பணத்தில் ஆகக் குறைந்தது 50 சதவீதத்தினை பிணையங்கள் முதலீட்டு கணக்கிற்கு
மாற்றுதல் வேண்டும். அவ்வாறு புரியும் போது வௌிநாட்டு நிறுவனங்களில் மீள் முதலீடு செய்ய அவர்களினால் முடியும்.
181. இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அனுபவங்களைக் கொண்டு, ஆகக் குறைந்த வரையறைகளுடன் வௌிநாட்டுச் செலாவணி வருமானத்தினை அதிகரிப்பதற்கு வசதி செய்யும் வகையில் முதலீட்டு உட்பாய்ச்சல் முகாமைத்துவச் சட்டமொன்றினை மிகவிரைவில் அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கிடையில் காணப்படும் வட்டி வீதத்திற்கிடையிலான வேறுபாடுகளின் பயனை அடைந்து கொள்வதற்கு நாங்கள் வௌிநாட்டுக் கம்பனிகளை அழைக்கின்றோம். அத்தகைய வியாபாரத்திற்கான சர்வதேச வியாபார ஏற்பாடொன்றினை உருவாக்குவதற்கு முடியுமான திட்டங்களை நாம் உறுதிப்படுத்தவுள்ளோம்.
182. கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்திய சமுத்திரத்தில் எமது உபாய ரீதியான இட அமைவினை சிறந்த முறையில் பேண வேண்டியுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கினை தரமுயர்த்தல், அரசியல் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தல் என்பதன் மூலம் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வியாபாரங்களின் தலைமையகங்களை கவரக்கூடிய ஆற்றிலினை நாம் பெற்றுள்ளமை தௌிவானதாகும். ஆசிய கிரிக்கட் பேரவை தனது தலைமையகத்தினை கொழும்பில் தாபித்திருக்கின்றது என்பதனை தொிவித்துக் கொள்வதில் நான் பெருமிதமடைகின்றேன். சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வியாபார தொழில்முயற்சிகள் தமது தலைமையகங்களை இலங்கையினை நோக்கி நகர்த்துவதற்கு ஊக்கமளிப்பதற்கு நிறுவன வரிகளிலிருந்து விலக்களிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
183. ஏதாவதொரு வருடத்தில், முன்னைய மூன்று வருட சராசரி ஏற்றுமதி புரள்வு வருமானத்தில் 5 சதவீதம் வரை ஆடைத் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள வௌிநாட்டு கம்பனிகளுடன் முதலீடு செய்வதற்கு இலங்கையில் ஆடைத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள கம்பனிகள் அனுமதிக்கப்படும். வௌிநாடுகளில் தாபிக்கப்பட்ட அத்தகைய தொழில் முயற்சிகளின் இலாபங்கள் மற்றும் வருமானங்கள் இலங்கையிலுள்ள முதலீட்டுக் கம்பனியினால் பெறப்படுதல் வேண்டும்.
184. இலங்கைக்கு வௌியே வௌிப்புற வௌிநாட்டுக் கணக்கின் (ழுரவறயசன ஐெஎநளவஅநவெ யுஉஉழரவெ) மூலம் முதலீடு செய்துள்ள இலங்கையில் வதியுமொருவர், அத்தகைய முதலீட்டுக்கான மூலதன வருமானத்தினை பெற்றிருப்பாராயின், இலங்கைக்கு வௌியேயுள்ள ஒருவரினால் மேற்கொள்முடியுமான முதலீட்டின் ஆகக் கூடிய பெறுமதிமீதான வரையறையின்றி, அவ்வாறு பெறப்பட்ட மூலதனப் பெறுமதியின் 50 சதவீதம் வரை குறித்த வௌிநாட்டுக் கணக்கினூடாக மீள் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவார். தற்பொழுது இலங்கைக்கு வரும் வௌிநாட்டவரொருவர் 15,000 ஐ.அ. டொலருக்கு மேற்பட்ட வௌிநாட்டுச் செலாவணியினை வௌிப்படுத்துவதற்கு தேவைப்படுத்தப்படுவார். இவ்வரையறையினை 40,000 ஐ.அ. டொலராக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். கம்பனிகள் தனது ஐந்தொகையின் உறுதித்தன்மைக்கேற்ப சர்வதேச ரீதியாக நிதியைத் திரட்டுவதற்கு அனுமதிக்கப்படும். அக்கம்பனி நாணயமாற்று ஆபத்தினை தாங்கிக்கொள்ளுதல் வேண்டும். இவ் ஒழுங்குவிதிகளில் ஏதேனுமொன்றை மீறும் சந்தர்ப்பத்தில் ரூபா 50 மில்லியன் தண்டமாக அறவிடப்படும். வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் அத்தகைய நிதி திரட்டல் மீது அவைகளின் ஐந்தொகையிலுள்ள வௌிநாட்டு பொறுப்புக்கலானது மொத்தச் சொத்துக்களின் 35 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
185. இலங்கை ரெலிகொம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை என்பன கொழும்பின் நகர வடிவமைப்பினை மாற்றக்கூடிய வானுயர்ந்த சிறப்புக் கட்டிட கருத்திட்டங்களில் ஏறக்குறைய ரூபா 10 பில்லியனை முதலீடு செய்யவுள்ளன. இந்தக் கட்டிடங்கள் முதலீடுகள் மற்றும் பொருளாதார செயற்பாடுகளுக்கான மையமாக அமையுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இன் நோக்கத்திற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றுக்கு 2017 இல் ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
ஏற்றுமதிகள் துறை
186. கௌரவ சபாநாயகர் அவர்களே, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சவால்களின் காரணமாக எமது ஏற்றுமதி வருமானம் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. எமது ஏற்றுமதிகள், உற்பத்திகள் மற்றும் சேவைகள் போட்டித் தன்மைமிக்கனவாக தொடர்ந்திருக்கச் செய்யும் வகையில் பன்முகப்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. உலக பெறுமதி சங்கிலியுடன் நாம் இணைந்து கொள்ள வேண்டியுள்ளது. பெறுமதி சோ்ப்பு, சந்தை அடைவினை அதிகரித்தல் மற்றும் புத்தாக்கம் என்பன இவற்றுள் முக்கியமானவையாகும். சிங்கப்பூர், சீனா, யப்பான், கொரியா, வங்காளதேசம் மற்றும் ஆபிரிக்காவில் வளர்ந்துவரும் சந்தைகளுடன் எமது அரசாங்கம் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது. அதேபோன்று, ஐரோப்பிய யூனியனுக்கான மீன் ஏற்றுமதித் தடையினை நீக்குவதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். ஜிஎஸ்பி பிளஸ் சலுகையினை மீளப்பெற்றுக் கொள்வதற்கு ஐரோப்பிய யூனியனுடனான எமது கலந்துரையாடல்
ஐரோப்பாவுக்கான எமது ஏற்றுமதிகளை மேலும் அதிகரிக்கச் செய்யுமென நான் உறுதியாக நம்புகின்றேன். சர்வதேச வர்த்தகத்திற்கான தளமொன்றினை உருவாக்குவதானது சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளுக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதாக அமையும்.
187. உறுதியான நாணயச் செலாவணி விகிதம் மற்றும் ஆரோக்கியமான ஒதுக்கு நிலைமை என்பவற்றினை விசேடமாகப் பேணுகின்ற அதேவேளை பேரண்டப் பொருளாதார அடிப்படைகளை மேம்படுத்துவதானது உறுதியான ஏற்றுமதி செயலாற்றுகையினை ஏற்படுத்த முடியுமாக இருக்கும். எவ்வாறாயினும் வர்த்தகத்திற்கான சர்வதேச போக்கு தொடர்ந்தும் சிறிதளவு பாதிப்படைந்துள்ளதுடன் ஏற்றுமதியாளர்களும் பல்வேறு சவால் நிறைந்த சூழ்நிலையினை எதிர்நோக்கியுள்ளனர். இப்பின்னணியில் அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த வகையில், நிச்சயமற்ற நெருக்கடியான நிலைமையில் சிறந்த செயலாற்றுகை மிக்க ஏற்றுமதியாளர்களுக்கு நாம் ஊக்குவிப்புகளை வழங்கவுள்ளோம். 25 சதவீதமான வரி விடுமுறை வழங்கப்படுவதுடன் அவர்கள் 2015 ஆம் ஆண்டினை விட 2017 இல் 15 சதவீதத்தினால் தமது ஏற்றுமதி வருமானத்தினை அதிகரித்திருத்தல் வேண்டும். அவர்களது ஏற்றுமதி வருமானம் 7.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுமாயின் 5 சதவீத வரி
விடுமுறை வழங்கப்படும்.
188. என்றுமில்லாதவாறு, எக்சிம் வங்கிக்கான தேவை இன்று அதிகரித்துள்ளது. இந்த வகையில் 2017 இலிருந்து இதன் தொழிற்பாடுகளை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். எக்சிம் வங்கியானது அரசாங்கம்
மற்றும் கைத்தொழிலுடன் இணைந்து ஆரம்ப மூலதனமாக ரூபா 25,000 மில்லியனைக் கொண்டிருக்கும். அரசாங்கத்தின் ஆரம்ப பங்களிப்பாக ரூபா 10,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
189. ஏற்றுமதி, சுற்றுலா, வௌிநாட்டு நேரடி முதலீடு மற்றும் ஸ்ரீ லங்கா வியாபாரக் குறியீடு என்பவற்றின் மதிப்பினை அதிகரிக்கச் செய்வதற்கு, உறுதியான, கட்டமைப்புக்குட்பட்ட மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட சர்வதேச சந்தை பிரசாரமொன்றை மேற்கொள்வது முக்கியமானதாகும். இப்பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
190. அதேவேளை, வியாபார உறவுகள் மற்றும் சந்தை அடைவுகளை விருத்திசெய்வதற்கு வசதியளிக்கக் கூடிய வருடாந்தம் இடம்பெறும் கென்ரன் சந்தை, இந்திய மற்றும் ஜேர்மன் சந்தைகள் போன்ற பிரதான வர்த்தக சந்தைகளில் எமது பங்குபற்றுதலினை நாம் உறுதிப்படுத்தவுள்ளோம்.
191. தனியார் துறை மற்றும் ஏனைய பிரச்சார நிறுவனங்களுடன் இணைந்து ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் இலங்கை தேயிலைச் சபை என்பன இலங்கையின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை வருடந்தோறும் காட்சிப்படுத்தக் கூடிய கொழும்புச் சந்தை எனப்படும் கண்காட்சியொன்றினை ஏற்பாடு செய்வதற்கு நான் சிபாரிசு
செய்கின்றேன். இதன் முதலாவது கண்காட்சி 2017 ஒக்டோபரில் இடம்பெறும்.
இந்நோக்கத்திற்காக ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
192. கௌரவ சபாநாயகர் அவர்களே, நாட்டிலுள்ள அதிவேகப் பாதைகளில் நன்மையினை நாம்முழுமையாகப் பெற்றுள்ளோம் என நான் நினைக்கவில்லை. அதிவேகப் பாதைகளின் நன்மைகளை பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் நாம் அவற்றினை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இந்த வகையில் அதிவேகப் பாதைகளைப் பயன்படுத்தி தனியார் சுதந்திர வர்த்தக வலையங்களை உருவாக்குவதில் அரசாங்கத்தினை பங்காளராக சோ்த்துக் கொள்வதற்கு தனியார் துறைக்கு ஊக்கமளிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். அரசாங்கம் இந்நோக்கத்திற்காக மின்சாரம் மற்றும் நீர் என்பவற்றுடன் காணியினை வழங்கும். இதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
193. அதேவேளை, இறப்பரினை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகள், மருந்துப் பொருட்கள், புடவைத் தயாரிப்பு, கனிப்பொருள், இரசாயணக் கைத்தொழில மற்றும ் தானியங்கி உபகரணக் கைத்தொழில் ஆகிய கைத்தொழில் முயற்சிகளை இலக்காகக் கொண்டு களுத்துறை (பண்டாரகமை), இரத்தினபுரி (எம்பிலிபிட்டிய), புத்தளம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 4 சுதந்திர வர்த்தக வலையங்களை தாபிப்பதற்கு அரச தனியார் பங்கேற்புகளுக்கு நாம் ஊக்கமளிக்கவுள்ளோம்.
194. விசேட நிபுணத்துவத்தின் நன்மையினைப் பெற்றுக் கொள்வதற்கு அரச தனியார் பங்கேற்புடன் 15 ஏற்றுமதி கிராமங்களை நாம் தாபிக்கவுள்ளோம். தகவல் தொழில்நுட்பம், றோபோ தொழிற்றுறை, ஆடை வடிவமைப்பு, உயர்தர ஆடை உற்பத்தி மற்றும் படகுத் தயாரிப்பு போன்ற முக்கிய கைத்தொழில்கள் தொடர்பாக எமது முக்கிய கவனத்தினை செலுத்தவுள்ளோம்.
195. உலகில் சிறந்த கறுவாவினை நாம் உற்பத்தி செய்த போதிலும், 85 சதவீதமான கறுவா அதன் மூலப்பொருள் வடிவிலேயே ஏற்றுமதி செய்யப்படுவதுடன் பெறுமதி சோ்ப்பானது கனிப்பொருள் கைத்தொழில் போன்று இத்துறையிலும் பெரும்பாலும் பூச்சியமாகவே காணப்படுகின்றது. எனவே, ஏற்றுமதிகளின் பெறுமதி சோ்ப்பினை அதிகரிப்பதற்கு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கின்றேன்.
196. ஆடை மற்றும் புடவைக் கைத்தொழிலாளது 2015 இல் 4,800 மில்லியன் ஐக்கிய அமொிக்க டொலர் வௌிநாட்டுச் செலாவணியை சம்பாதித்த பிரதான தொழிற்றுறையாக காணப்பட்ட போதிலும், 2015 இல் 2,296 மில்லியன் ஐக்கிய அமொிக்க டொலர் பெறுமதியான புடவைகளை இறக்குமதி செய்துள்ளோம். ஆடைக் கொத்தணியொன்று உருவாக்கப்படுதல் வேண்டும். இதில் தனியார் துறையினைச் சோ்ந்த அளவிடல், சாயமிடுதல் மற்றும் முடித்தல் பிரிவுகளும்
உள்ளடங்கியிருக்கும். இத்துறையில் முதலீடு செய்கின்ற வியாபாரங்களுக்கு முதலீட்டு நிவாரணம் வழங்குவதன் மூலமும் போதிய வசதிகளை ஏற்பாடு செய்வதன் மூலமும் இத்துறைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஆகக்குறைந்தது 2,000 மில்லியன் ஐக்கிய அமொிக்க டொலர்களை சேமிக்க முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
197. நெருக்கடியான நிலைமைகளின் கீழ் மீள்தயாரிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட ஆடைகளின் இறக்குமதி மற்றும் மீள்ஏற்றுமதிக்கு ஆடைக் கைத்தொழிற்றுறைக்கு அனுமதிவழங்கப்படும்.
198. வியாபார ஊக்குவிப்பு செயற்திட்டங்களை விசேடமாக சர்வதேச வியாபார மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வுகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக வாணிப திணைக்களத்திற்கு ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
அரச உடமை தொழில் முயற்சிகள்
199. கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து 2014 ஆம் ஆண்டினைவிட 2016 இல் 50 சதவீதமாக ரூபா 65 பில்லியன் அறவீடுகளையும் பங்கிலாபங்களையும் கொண்ட அரச தொழில் முயற்சிகளின் செயலாற்றுகையினை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் வளங்கள் வீணடிக்கப்படாதிருக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
200. கௌரவ பிரதம மந்திரியினால் குறிப்பிடப்பட்டவாறு, அரச உடைமை தொழில்முயற்சிகள் உறுதியான வியாபார நிறுவனங்களாக மாறுவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள விரும்புகின்றோம். இதற்காக வேண்டி அரச தொழில் முயற்சிகள் செலவினத்திற்கேற்ற விலைக் கட்டமைப்பினையும் தொழிற்பாட்டுச் செல்வாக்கினையும் பெற்றிருக்கும். இப்பின்னணியில், பிரதான செயலாற்றுகை சுட்டிகளுக்கேற்ப தொிவு செய்யப்பட்ட அரசதொழில் முயற்சிகளுடன் அரசாங்கம் செயலாற்றுகை ஒப்பந்தங்களில் ஈடுபடும்
நன்றி - வீரகேசாி
நன்றி - வீரகேசாி
வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
ReplyDeleteநான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)