வடக்கில்
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வடக்கு மாகாண சபை வேண்டுமென்றே
தடுத்து வருகின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் கடந்த 1990ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி
விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள்
பூர்த்தியாகின்றன.
இதனை முன்னிட்டு வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்த விஷேட கலந்துரயாடல் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றும் போது சுமந்திரன் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய எம்.ஏ. சுமந்திரன்,
வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் முஸ்லிம் மக்களின்
மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதை
நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும்.
வடக்கில் வாழ்ந்த அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் மேற்கொள்ள முடியாத
நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி
தலைவருமான இரா. சம்பந்தன், பிரதியமைச்சர் அமீர் அலி, முன்னாள் பாராளுமன்ற
உறுப்பிர் ஹுனைஸ் பாரூக், அசாத் சாலி உள்ளிட்ட பலர கலந்து கொண்டிருந்தனர்.

0 comments:
Post a Comment