அமெரிக்காவின் 42வது ஜனாதிபதியாக திகழ்ந்த பில் கிளிண்டனுடன் படுக்கை
அறையில் பெண் ஒருவர் மசாஜ் செய்யும் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல்
பரவி வருகிறது.
பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில்
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்
என்பது நினைவுக்கூரத்தக்கது.
இந்நிலையில் வெளியான குறித்த
புகைப்படத்தில், படுக்கை அறையில் நிர்வாணமாக பில் கிளிண்டன்
தொலைக்காட்சியில் மனைவியின் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அவரின்
முதுகில் வேறொரு பெண் மசாஜ் செய்கிறார், குறித்த புகைப்படம்
விபச்சாரியுடனான பில் கிளிண்டன் என்ற தலைப்பில் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இது
ஒரு உண்மையான கசிந்த புகைப்படம், ஹேக்கிங் வழியாக புகைப்படம்
வெளியாகியிருக்கும் என கருதி மக்கள் கவலையடைந்துள்ளனர். ஆனால், அது
உண்மையில்லை என உறுதியாகியுள்ளது.
உண்மையில் புகைப்படம் அலிசன் ஜாக்சன் கலை திட்டத்தின் ஒரு பகுதி என தெரியவந்துள்ளது.
அலிசன்
ஜாக்சன், டொனால்ட் டிரம்ப் உட்பட பிரபலங்கள் யதார்த்தமாக காணப்படும்
காட்சிகளை உருவாக்கி ஒரு முழு புத்தகத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
அதற்காக
உருவாக்கப்பட்ட பில் கிளிண்டனின் புகைப்படமே தற்போது வெளியாகி
சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. குறித்த புகைப்படத்தில் உள்ள பெண் ஒரு நடிகை,
கிளிண்டனின் புகைப்படமும் போலி என உறுதியாக தெரிவித்துள்ளனர்

0 comments:
Post a Comment