கிழக்கு
மாகாணத்திற்குட்பட்ட பல பகுதிகளில் புத்தர் சிலை வைப்பதற்கு தம்மால்
எதுவித தடங்களும் வராதென பெரிய தொகைக்கு ஒப்பந்தமொன்று முக்கியஸ்தர்களுடன்
செய்யப்பட்டதாகவும் இப்போது அவ்வொப்பந்தத்தை அவர்கள் மீறியுள்ளதாகவும்
அமைச்சர் தயாகமகே குற்றம் சுமத்தியுள்ளதாக ஒரு செய்தியொன்று
கிடைக்கப்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தயா கமகே கூறியதாக தெரியவருவதாவது:
இந்த
சம்பவத்தில் தான் குறித்த அரசியல் இயக்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேசிய
போது அவர்கள், சிலைவைப்பு விடயத்தில் தாங்கள் தலையிட கூடாதென்றால் குறித்த
பணத்தொகை தரவேண்டுமென்றும் இதற்கு ஒப்பந்தமொன்றும் செய்து கொள்ள வேண்டும்
என்றும் கூறினர். அதற்கு சம்மதித்து பணத்தொகையை கையளித்த பின்னர் ஒப்பந்தம்
செய்யப்பட்டது.
மேலும்
இந்த ஒப்பந்தத்தின் படி 7 இடங்களில் சிலை வைக்க அனுமதி தரப்பட்டது. அந்த
இடங்கள் அனைத்தும் அவர்களாலேயே தெரிவு செய்யப்பட்டு தரப்பட்டது.
தற்போது
இவர்கள் மக்கள் முன்னிலையில் நடிப்பது எதற்காகவென்று தனக்கு தெரியாதென்றும்
இவர்கள் அவ்வொப்பந்தத்தை மீறுவார்களாயின் தான் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளதாக எமது இணையத்திற்கு ஒரு செய்தி
கிடைக்கப்பெற்றுள்ளது. இச் செய்தியை உறுதிப்படுத்த முனைந்து வருகின்றோம்.

0 comments:
Post a Comment