எஸ்.றிபான் -
முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து கொண்டு செல்லுகின்றன. அதே வேளை, ஒரு சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரின் ஆசிர்வாதத்துன் சிவசேன அமைப்பு வன்னியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பல அநீயாங்களை செய்து கொண்டிருக்கும் சிவசேன அமைப்புக்கும் வன்னியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவசேன அமைப்புக்குமிடையே தொடர்புகள் இருக்குமா என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் வேண்டுமென்று புத்தர் சிலை வைக்கப்படுகின்றது. யுத்த காலத்தில் முஸ்லிம்களினால் இழக்கப்பட்ட காணிகள் மீளவும் கையளிக்கப்படவில்லை. அவை தொல்பொருள் திணைக்களத்திற்கும், வனபரிபாலன திணைக்களத்திற்குரியதென்று தெரிவிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது தொடர்பில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற சந்தேகங்கள் தீர்க்கப்படாதுள்ளன. இவ்வாறு முஸ்லிம்கள் நாட்டின் பல பாகங்களிலும் இன்னல்களுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னால் கடந்த ஆட்சியிலும், நல்லாட்சி எனும் நாமத்தையுடைய இன்றைய அரசாங்கத்திலும் சிங்கள அமைச்சர்கள் உள்ளார்கள்.
இந்தப் பின்னணியில் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்று முஸ்லிம் பிரதேசங்களிலும், ஊடகங்களிலும் அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகையதொரு கூட்டமைப்பின் மூலம்தான் நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம். குறைந்த பட்சம் பிரச்சினைகளை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்குமென்று முஸ்லிம் கூட்டமைப்பை வரவேற்கின்றவர்களின் எண்ணமாக இருக்கின்றன.
காலத்திற்கு காலம் முஸ்லிம் கூட்டமைப்பின் அவசியம் பற்றி பேசப்பட்டாலும், அது சாத்தியமாகவில்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தமது சுயநல அரசியலுக்காக முஸ்லிம் கூட்டமைப்பை நிராகரித்தார்கள். முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்படுதிலும் பார்க்க முஸ்லிம்கள் ஒரு கட்சியின் கீழ் ஒற்றுமைப்படுதல் வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பல மேடைகளில்; அமைச்சராக இருந்த போது தெரிவித்துக் கொண்டார்.
முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமாயின் நாம் பலமாக இருக்க வேண்டுமென்று ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். றிசாட் பதியுதீன் தமது கட்சியை தேர்தலில் போட்டியிடச் செய்யாத காலத்தில் முஸ்லிம் கூட்டமைப்பை வரவேற்கவில்லை. அவர் தேசிய கட்சிகளில் நம்பிக்கை வைத்துக் கொண்டார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தேவைக்காக ஊவா மாகாண சபைத் தேர்தலில் ரவூப் ஹக்கீமும் றிசாட் பதியுதீனும் இணைந்து கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கினார்கள். முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முதற்படி என்றும் சொல்லிக் கொண்டார்கள். தேர்தல் முடிந்ததும் இக்கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. இதன் மூலமாக இதுவொரு போலி என்று மக்களினால் உணரப்பட்டது.
ஆனால், தற்போது என்றுமில்லாத வகையில் முஸ்லிம் கூட்டமைப்பு பற்றி அதிகம் பேசப்படுகின்றன. முஸ்லிம் கூட்டமைப்பின் தேவை பற்றிய உணர்தலுக்கு முஸ்லிம்களின் அரசியலை பொறுப்பேற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அப்பொறுப்பை சரியாக செய்யாமையாகும். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன கூட முஸ்லிம்களின் உரிமை அரசியலைச் செய்யவில்லை. இக்கட்சிகள் தேசிய கட்சிகளுடன் சங்கமித்து அபிவிருத்தி அரசியலை மக்கள் மயப்படுத்திக் கொண்டன. இதனால், முஸ்லிம்களும் அஸ்ரப் காட்டிய உரிமை அரசியலிருந்து தூரமாகிக் கொண்டார்கள். முஸ்லிம்களின் உரிமை அரசியல் அற்ப நிலைத்திருக்காத அபிவிருத்திக்காக அடமானம் வைக்கப்பட்டன. இதனால், முஸ்லிம்களின் அரசியல் பலமிழந்து காணப்படுகின்றன. இதனால்தான் முஸ்லிம் கூட்டமைப்பு அவசியமென்று உணரப்பட்டுள்ளது.
அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும், முஸ்லிம் காங்கிரஸினதும், ஏனைய முஸ்லிம் கட்சிகளினதும், முஸ்லிம் வாக்காளர்களினதும் மனப் போக்கில் ஏற்பட்ட குறுகிய அரசியல் இலாப எண்ணங்களினால் முஸ்லிம்களின் அரசியல் கூனிக், குறுகி, ஓட்டையாகி நலிவடைந்துள்ளது.
முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் காலத்திற்கு காலம் வரும் தேர்தல்களின் போது கரையோர மாவட்டம் என்றும், வில்பத்து பிரச்சினை என்றும், வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்றும், தென்கிழக்கு அலகு என்றும் மக்களின் உணர்வுகளை தூண்டிக் கொண்டார்கள். மறுபுறத்தில் பக்குவம், சாண்க்கியம் என்றும், முஸ்லிம்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம், நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று முஸ்லிம்களை சாந்தப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு முஸ்லிம்களின் உணர்ச்சியை தூண்டி தேர்தலில் வாக்குகள் பெறப்படுகின்றதே அல்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் செய்வதில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களின் குற்றங்களினால் கோழைகளாய் உள்ளார்கள்.
இதனால்தான் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகளினது அடாவடிகளும், தமிழ்ப் பேரினவாதிகளினது முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிரான பிரச்சாரங்களும் தீவிரமடைந்துள்ளன. ஆதலால், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பும் இருக்க வேண்டுமாயின் முஸ்லிம்களின் அரசியல் மீண்டும் பலப்படுத்தப்பட வேண்டுமென்ற சிந்தனை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்படுதல் வேண்டும். அதற்கு ஒரு அமைப்பு ரீதியான கட்டமைப்பு அவசியமாகும்.
ஆதலால், முஸ்லிம் கூட்டமைப்பு இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும். இக்கூட்டமைப்பு அவசியமில்லை என்று விவாதிப்பவர்கள் முஸ்லிம் சமூகத்தின் கூட்டு மொத்த அரசியல் பலத்தை இன்னும் சிதைவடையச் செய்கின்றவர்களாகவே இருப்பார்கள்.
இதே வேளை, கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்தான் முஸ்லிம் கூட்டமைப்பை வரவேற்றுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை வீழ்த்த வேண்டுமென்ற திட்டத்தைக் கொண்டுள்ளவர்களின் சதிதான் முஸ்லிம் கூட்டமைப்பாகும் என்று ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை நேசிக்கின்றவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
உண்மையில் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் அத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம் கூட்டமைப்பை நிராகரித்திருப்பார்கள். கடந்த ஆட்சியில் முஸ்லிம் கூட்டமைப்பு அவசியமதில்லை என்று சொல்லிக் கொண்டமையை மறக்க முடியாது.
மறுபுறத்தில் வெற்றி பெற்றவர்கள் முஸ்லிம் கூட்டமைப்பு அவசியமில்லை. முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் போதும், எல்லோரும் இக்கட்சியின் கீழ் ஒற்றுமைப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் பலம், பலவீனங்களை சரியா எடை போடாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
முஸ்லிம் கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பல கூறுகளாக உடைந்துள்ள கட்சிகளை மீண்டும் ஒட்ட வைப்பதற்கான முயற்சி என்று எண்ணிக் கொள்ளல் வேண்டும். முஸ்லிம்களின் அரசியல் பல பெயர்களில் பங்குபோடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. இதனை சரி செய்ய வேண்டுமாயின் முஸ்லிம் கூட்டமைப்பின் கீழ் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் கீழ்தான் உருவாக்கப்பட வேண்டுமென்று அக்கட்சியில் ஒரு சாரார் தெரிவிக்கின்றார்கள். இதனை ஏனைய கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு பெயர் முக்கியமல்ல. ஒற்றுமைதான் முக்கியமாகும் எனத் தெரிவிக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒற்றுமைப்பட்டால் ரவூப் ஹக்கிமின் தலைமையை நிராகரித்த தாங்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டியேற்படும் என்ற எண்ணத்தை மாற்றுக் கட்சியினர் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதனால், முஸ்லிம் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் கீழ் செயற்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்படுகின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் தலைமையில் செயற்படவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக மாவை சேனாதிராஜா உள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் உள்ளார். ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் தமிரசுக் கட்சி அதிக செல்வாக்குப் பெற்றிருப்தே இதற்கு காரணமாகும். அது போலவே முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படுமாயின் முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், முஸ்லிம் கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமை வகிக்க வேண்டுமென்று நிபந்தனை போட முடியாது. எல்லாக் கட்சிகளும் விரும்பும் ஒருவர்தான் தலைவராக முஸ்லிம் கூட்டமைப்புக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் எந்தக் கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சில வேளை ரவூப் ஹக்கீமாகவும் இருக்கலாம். ஹிஸ்புல்லாவாகவும் இருக்கலாம். ஆனால், தெரிவு செய்யப்படும் தலைவர் ஆளுமை கொண்டவராகவும், தைரியம் நிறையப் பெற்றவராகவும், சமூகப் பற்றுக் கொண்டவராகவும், அல்லாஹ்விற்கு அஞ்சுகின்றவராகவும் இருக்க வேண்டும்.
முஸ்லிம் கூட்டமைப்பு என்பது சிதைவடைந்துள்ள முஸ்லிம் அரசியலைப் பலப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையே அன்றி யாரையும் வெற்றி பெறச் செய்வதற்கானதொரு முயற்சியாகவோ அல்லது தோல்வியடையச் செய்வதற்கானதொரு சதியாகவோ இருக்கக் கூடாது. யாரும் தலைவராக வரலாம். யார் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் முஸ்லிம் சமூகம் தோல்வியடையக் கூடாது. துவண்டு கிடக்கும் முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கானதொரு வழிமுறையே முஸ்லிம் கூட்டமைப்பாகும்.
இஸ்லாம் ஒற்றுமை எனும் கையிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முரண்பாட்டுக் கையிற்றையே நீண்ட காலமாக பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது போலவே ஏனைய துறை சார்ந்தவர்களும், தலைவர்களும் உள்ளார்கள்.
ஆதலால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வாக்காளர்கள் அனைவரும் கட்சி சார்பு பற்றுதல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளல் வேண்டும். சமூகம் சார்ந்த பற்றுதலை கடைப்பிடிக்க வேண்டும். கட்சி சார்புப் பற்றுதல் முஸ்லிம் சமூகத்தை இன்னும் சீரிழித்துவிடும். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பல கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளமை பேரினவாதக் கட்சிகளின் சதியாகும். இன்றும் பேரினவாதக் கட்சிகளின் தலைவர்கள் முஸ்லிம் அரசியலை மேலும் பலவீனப்படுத்துவற்கே திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தமது திட்டத்தை அமுல்படுத்துவதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்களையும். பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவி ஆசை கொண்டவர்களாக மாற்றியுள்ளார்கள். இதனால், முஸ்லிம் கட்சிகள் பதவிக்கும், பணத்திற்கும் ஆசை கொண்டவர்களின் மாயக் கோட்டையாக உள்ளது. இக்கோட்டைக்குள் இருந்து வெளியே வந்தால்தான் முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியமாகும். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மண் கோட்டாவிற்கு விட்டுக் கொடுப்பதற்கு தயாராகவுள்ள அரசியல்வாதிகளும் உள்ளார்கள். கடைக் கண் பார்வைக்கும் சமூகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு தயங்காத தலைவர்களும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளார்கள். ஆதலால், முஸ்லிம் கூட்டமைப்பு என்பது இலகுவாக சாத்தியமாகாது.
கடந்த காலங்களில் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற முயற்சியை எடுத்துக் கொண்டவர்கள் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களுடன் உரையாடல்களை மேற்கொண்டார்கள். தமது முயற்சியை இவர்களுடன் மட்டுப்படுத்திக் கொண்டமையால்தான் முஸ்லிம் கூட்டமைப்புக்கான முயற்சி தோல்வியடைந்தது. ஆதலால், முஸ்லிம் கூட்டமைப்புக்கான முயற்சி மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். ஏன் முஸ்லிம் கூட்டமைப்பு அவசியமென்று உணர வைக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், பொது அமைப்புக்கள் இம்முயற்சிகளுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை ஒரு பொது திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தரப்பினரும் தனித்தனியாகவும், கூட்டாகவும் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியமாகும். மனித சக்தியுற்பட்ட எதனையும் சாத்தியமற்றதென்று நிராகரிக்கக் கூடாது. அது இயலாமை மட்டுமன்றி எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்றவர்களின் முடியவாகும்.

0 comments:
Post a Comment