முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய
ராஜபக்ஸ ஆகியோருக்கு பயந்து கட்டுப்பட்ட நிலையிலேயே இராணுவமும், பொலிஸாரும்
இருந்தனர்.
இருந்தபோதும் தற்போது அந்நிலை மாறிவிட்டது முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த
இனவாதிகள் தாக்குதல் மேற்கொண்டாலோ அல்லது இனக் கலவரம் ஒன்று வெடித்தாலோ
இராணுவமும் பொலிஸாரும் இணைந்தே முஸ்லிம்களை தாக்குவர் என மஹிந்த அணியின்
தீவிர ஆதரவாளரான சத்தார் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய நிலவரங்கள் முஸ்லிம்களுக்கு அபாயகரமானவை. உண்மைச் சொல்லப்போனால்
முஸ்லிம்களுக்கு ஆபதான் காரியங்களே நடைபெற்று வருகிறது. இன்றை இராணுவமும்,
பொலிஸாரும் மைத்திரிக்கோ ரணிலுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல.
அல்லாஹ்தான் முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான
கலவரம் வெடித்தால் இராணுவமும், பொலிஸும் சிங்களவர்களுடன் இணைந்துகொள்ளும்
என்ற கசப்பான விசயத்தை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
0 comments:
Post a Comment