கண்டி - கல்ஹின்னை பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் இரண்டு முஸ்லிம் வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் 14 வயதான முபீத் மற்றும் 20 வயதான நாஸிர் என்போர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில்
காயமடைந்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில்
ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்
குறிப்பிட்டுள்ளது.
என்ன காரணத்திற்காக தாக்குல் சம்பவம் நடைபெற்றது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
சந்தேகநபர்களில்
ஒருவர் அங்குபுர - கபல்கஸ்தென்ன பிரதேசத்தில் வைத்து டி.56 ரக துப்பாக்கி
மற்றும் காருடன் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment