தேர்தல் ஒன்று நெருங்கி வருகிறது என்று எண்ணி கிராமங்களுக்கு சென்று
கட்சிகாக பணியாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட
அமைப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில்
நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட
அமைப்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேபோல்
புதிய கட்சியை தொடங்க முயற்சிப்போருக்கு அதனை தொடங்குமாறு சவால்
விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்ட
பின்னர், ஜனவரி 8 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து வெளியேறி செய்த
புரட்சிக்கு அப்பால் சென்ற புரட்சியை மேற்கொள்ள போவதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் மாத்திரமே உரையாற்றியுள்ளனர்

0 comments:
Post a Comment