• Latest News

    November 12, 2016

    அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது மன்சூர் எம்.பி நம்பிக்கை இழந்துள்ளரா?

    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
    நேற்றிரவு (11) ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசையில் ஒளிபரப்பான “வெளிச்சம்” அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மன்சூரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான யாகூப் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்.
    இறக்காமம் மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் அவர்கள், அமைச்சர் மனோ கணேசனுடன் சென்று பிரதமரைச் சந்தித்ததாகவும் இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்க தனக்கு ஒரு வார கால அவகாசம் தருமாறு பிரதமர் கோரியதாகும் செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யாகூப் ஒரு கேள்வியை மன்சூர் எம்பியிடம் கேட்டிருந்தார்.
    இந்தக் கேள்விக்கு மன்சூர் எம்.பி வழங்கிய பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அமைச்சர் மனோ கணேசனுடன் சென்று பிரதமரைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. பிரதமர் ஒரு வார அவகாசம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், என்னால் இவற்றை ஊர்ஜிதமாகக் கூற முடியாது என்ற பொருள்பட்ட அர்த்தத்தில் போட்டாரே ஒரு போடு.
    அவ்வாறாயின் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் புத்தர் சிலை தொடர்பில் பேசுவதற்காக பிரதமர் ரணிலைச் சந்திக்கவில்லையா?. சந்தித்ததாக வெளிவந்த செய்திகள் பொய்யா?
    தனது மாவட்டத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத ஒரு விடயம் தொடர்பில் தனது கட்சியின் தலைமை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஊர்ஜிதமாக தன்னால் கூறமுடியாது என்றால்.... இதனை விட எடுத்துச் சொல்ல வேறு என்னதான் உள்ளது?
    குறிப்பு: தொடர்பான வீடியோவையும் வெளியிடுவேன்
    https://www.facebook.com/siddeque.kariyapper 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது மன்சூர் எம்.பி நம்பிக்கை இழந்துள்ளரா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top