• Latest News

    November 04, 2016

    மார்பகத்தை வெட்டி எடுக்கும் கொடூர தண்டனை..! எங்கே எதற்கு என்று தெரியுமா..?

    1900களில், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பல மனிதாபிமானமற்ற நடைமுறைகள் அமலில் இருந்து வந்தன. அதுவும் ஜாதி வெறியினரால் பெண்கள் மிகவும் மோசமான துன்புறுத்தலுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.
    தாழ்ந்த ஜாதியினருக்கு ஒரு சட்டம், உயர்ந்த ஜாதியினருக்கு ஒரு சட்டம் என தனி தனி சட்டம் இருந்தது.
    கேரள மாநிலம் திருவாங்கூர் மாவட்டத்தில், அதாவது தற்போதைய திருவனந்தபுரத்தில் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது. தங்கள் உடலின் கீழ்புற பாகங்களை மட்டும் பெண்கள் துணியால் மறைத்துக்கொள்ள வேண்டும்.
    இதனால் இந்த பெண்கள், தங்களுடைய மார்பகங்கள் பிறரின் பார்வைக்கு தெரிகிறதே என்று ஆதங்கம் கொண்டனர். மேலும் அவர்கள் மேலாடை அணிய விரும்பினால் அதற்காக தனியாக வரி செலுத்த வேண்டுமாம்.
    Namboodiri, Brahmin, Kshatriya மற்றும் Nair ஆகிய மேல்ஜாதி வகுப்பினர் மட்டும் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டார்கள்.
    ஒரு முறை கீழ் ஜாதியை சேர்ந்த பெண் ஒருவர் அனுமதியின்றி மேலாடை அணிந்திருப்பதை பார்த்த இளவரசி, உடனடியாக அவரது மார்பகங்களை வெட்டி வீசுமாறு கொடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    நாங்கள் வரி செலுத்துகிறோம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அப்பெண்கள் மேலாடை அணியும் பட்சத்தில், அவர்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்படும்.
    அப்பெண்கள் வரிக்கட்டணம் செலுத்த தவறினால், அவர்கள் தங்களது மார்பகங்களை வெட்டி வாழை இலையில் வைக்க வேண்டும் என்ற தண்டனை வழங்கப்படும்.
    காரணம் கீழ் ஜாதி பெண்கள் தங்களுடைய மார்பகத்தை மறைப்பது பெரும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மார்பகத்தை வெட்டி எடுக்கும் கொடூர தண்டனை..! எங்கே எதற்கு என்று தெரியுமா..? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top