சப்னி அஹமட்-
அட்டாளைச்சேனை
பிரதேச முழுவதும் உள்ள வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டு வடிகான்கள்
புதிதாக உருவாக்கப்பட்டு வெள்ள நீர்கள் வழிந்தோடுவதற்கான உடனடியாக
நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், திணைக்களத்தலைவர்களுக்கு
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் உத்தரவிட்டார்.
அட்டாளைச்சேனை
பிரதேச ஊர்க்கரை வாய்க்காலை அகழ்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று (18)
பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர்
எம்.இர்பான் தலைமையில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்த் தெரிவிக்கையில்
மேலும்,
இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து வேலைத்திட்டங்களும், குறிப்பாக நீர்ப்பாசன
மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரச்சினைகள் உட்பட வடிகான், நீர் பிரச்சினை
போன்றவற்றில் மாற்றங்கள் இடம்பெரும் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் எனவும்
தெரிவித்ததுடன் இத்திட்டத்திற்கமைவாக அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு முதல்
இங்குள்ள ஊர்க்கரை வாய்க்கால்கள் புணரமைக்கப்படும் வேலைத்திட்டங்கள் யாவும்
நடைபெற்றுக்கொண்டிருப்பதுடன் இதற்கான முழு வேலைகளையும் மிக
விரைவாக செயற்படவுள்ளது.
அத்துடன் அட்டாளைச்சேனை
கோணாவத்தை கொட்டுப்பாலத்தின் நடுப்பகுதியை உடைத்து அதற்கான தற்காலிக பாலம்
ஒன்றை எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிப்பதாகவும், அனர்த்த முகாமைத்துவ
திணைக்களம் மற்றும் நீர்ப்பாசணத்திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இது
இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில்
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். ஹனீபா, அக்கரைபபற்று பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி எ.எல்.எம்.ஜெமில், நீர்ப்பாசன பொறியியலாளர், சுகாதார
வைத்திய அதிகாரி, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர்
மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment