ஒழுக்கமான இராணுவமான இலங்கை இராணுவம் சதிப்புரட்சிக்கு தயாராகி வருவதாக
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தமையானது இராணுவத்திற்கு
செய்த அவமரியாதை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளர்.
அரசியல்
கோஷங்கள் இல்லாத போது நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கி அரசியல்
இலாபம் பெறும் நோக்கில் வெளியிடப்படும் இப்படியான கருத்துக்களுக்கு
இடமளிக்கக் கூடாது.
ஜனாதிபதி அச்சமின்றி, பொது வேட்பாளராக
போட்டியிட்டு, வெற்றிபெற்று, அவர் பொது வேட்பாளராக போட்டியிட காரணமாக
அமைந்த விடயங்களை மனதில் வைத்து கொண்டு அவற்றை படிப்படியாக நிறைவேற்றி
வருகிறார்.
ஜனநாயக ரீதியான தெரிவு செய்யப்பட்டு, ஜனநாயக ரீதியான
வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து முன்னெடுத்து
வரும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்க போவதில்லை.
மக்களுக்குரிய
உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்து, மனித உரிமைகளை பாதுகாத்து,
நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் இந்த அரசாங்கத்தின் பயணம்
இலக்கு நோக்கி செல்லும் எனவும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment