• Latest News

    November 21, 2016

    காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு வகுப்பறை, தங்குமிட விடுதி கையளிப்பு

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    துருக்கி குடியரசின் சமூக நல அமைப்பான டெனிஸ் பினிரி (Deniz Feneri) அமைப்பின் அனுசரணையுடன் எஸ்.எப்.ஆர்.டி (Serendib Foundation For Relief And Development) நிறுவனத்தினால் காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நிர்மாணிக்கப்ட்ட வகுப்பறை மற்றும் தங்குமிட விடுதிக்கான இரு மாடிக் கட்டிடங்கள் இரண்டையும் அதற்கான தளபாடங்களையும் கையளிக்கும் நிகழ்வு 20.11.2016 நேற்று காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

    காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ.எல்.எச்.இஸ்மாலெப்பை ஜேபி தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரு மாடிக் கட்டிடங்களையும் அதற்கான தளபாடங்களையும் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக துருக்கிய நன்கொடையாளர்களான முஹம்மட் யாவூஸ்,சாதி பொஸ்குர்ட்,அஹமட் அக்டுகான் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் உப தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.அப்துர் ரஹ்மான்,கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம்.ரபீக், எஸ்.எப்.ஆர்.டி நிறுவனத்தின் தவிசாளர் நியாஸ் ,காத்தான்குடி காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குனர் சபை செயலாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி), காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலைய பிரதிநிதிகள் , உட்பட உலமாக்கள்,ஊர்பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இதன் போது அதிதிகளினால் முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தளபாடங்களுடன் கூடிய இரு மாடிக் கட்டிடங்கள் இரண்டும் நாடா வெட்டி நினைவுக் கல் திரை நீக்கம் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

    இங்கு காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்களுக்கும் அதன் உத்தியோகத்தர்களுக்கும் அன்பளிப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அத்தோடு குறித்த துருக்கிய நன்கொடையாளர்கள், முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ.எல்.எச்.இஸ்மாலெப்பை ஜேபி ஆகியோர் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    Displaying 2-DSC_4812.JPGDisplaying 3-DSC_4820.JPGDisplaying 3-DSC_4840.JPGDisplaying 4-DSC_4844.JPGDisplaying 5-DSC_4860.JPGDisplaying 6-DSC_4863.JPGDisplaying 7-DSC_4780.JPGDisplaying 9-DSC_4781.jpgDisplaying 12-DSC_4877.JPGDisplaying DSC_4855.JPG
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு வகுப்பறை, தங்குமிட விடுதி கையளிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top