கண்டி கெடம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற பௌத்த அமைப்புக்களின்
ஊர்வலத்தில் (19.11.2016) முஸ்லிம்களின் வியாபார நிலையங்களில் பொருட்கள் வாங்க வேண்டாம்
என பௌத்த அமைப்புக்களினால் துண்டுப்பிரசுரம் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இத்துண்டுப்பிரதேசத்தில்
நோலிமிட், பெசன்பக், எடிசலாட் போன்ற வியாபரப் பொருட்களை நுகர வேண்டாம் என
அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் சிங்கள மக்களிடத்தில் பகிரப்பட்டிருந்தன.
கண்களை
திறவுங்கள் – அநாகரீக தர்மபால அன்று சொன்னது இன்று நடைபெறுகின்றது என்று
இத்துண்டுப்பிரசுரதத்தில் வசனங்கள் ஆரம்பிப்பதுடன் பௌத்த மறுமலர்ச்சியின்
தந்தை அநாகரீக தர்மபாலவின் படமும் இதில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
இத்துண்டுப்பிரசுரத்தை
பகிர்ந்து சென்ற சிங்கள இளைஞர்கள் முஸ்லிம்களிடம் வியாபாரம்
செய்யாதீர்கள். அவர்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள். அப்படி
நீங்கள் அவர்களின் கடைகளில் பொருட்கள்; வாங்கினால் அதனைக் கொண்டு
பௌத்தர்களை அழிக்க முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று
கோஷமெழுப்பினர். அதனை துண்டுப்பிரசுரத்திலும் அச்சடித்து
பிரசுரித்திருந்தார்கள்.
இன்று
மதியம் நடைபெற்ற பௌத்த பிக்குகளின் ஊர்வலத்தில் நோலிமிட், பெசன்பெக்,
எடிசலாட் வியாபார நிலையங்களுக்கு எதிராக கோஷமெழுப்பப்பட்ட நிலையில் சற்று
முன்னர் பெப்பிலியான பெசன் பக்கில் தீ பரவியுள்ளது.
இத் தீக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர்.


0 comments:
Post a Comment