எஸ்.றிபான் -
ஒரு நாட்டில் உள்ள சட்டமானது தனது கடமையை செய்யாது போனால் அந்நாட்டில் அமைதியில்லாமல் போவதனை யாராலும் தடுக்க முடியாது. சட்டமும், நீதியும் மௌனிக்குமாயின் அந்த நாடு இருளில்தான் இருக்கும். அங்கு வாழும் மக்கள் நிம்மதியுடன் வாழ முடியாது. இந்த இருண்ட சூழலை நோக்கித்தான் தற்போது இலங்கை சென்று கொண்டிருக்கின்றதா என்று கவலை கொள்ள வேண்டியுள்ளது. நாட்டிலுள்ள சட்ட அனைவருக்கும் சமம் என்று அரசியல் யாப்பில் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் இதனைக் காண முடியாது. இலங்கையை ஆட்சி செய்த எந்த அரசாங்கமாக இருந்தாலும் சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்பட்டு வந்துள்ளன. சிறுபான்மையினரை ஒரு விதமாகவும், பெரும்பான்மையினரை ஒரு விதமாகவும், பௌத்த துறவிகளை வேறு விதமாகவும் சட்டம் கையாண்டு வருகின்றது. இந்த பாரபட்சத்திற்கு அரசாங்கத்தினர், அரசியல்வாதிகள், பொலிஸார் போன்ற தரப்பினர் துணையாக இருந்து வருகின்றனர். இந்த வரலாற்று தவறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போது சற்று உரமாகவே இருந்தது. கம்பு எடுத்தவர் எல்லாம் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டார்கள். இதனால், தமிழ், முஸ்லிம் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். அத்தோடு, கிறிஸ்தவ சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமைதியை விரும்பும் பௌத்த சிங்கள மக்களும் மனதால் நொந்து கொண்டார்கள்.
கடந்த ஆட்சியில் சிறுபான்மையினர் பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகளினால் பெரும் துயரங்களை அனுபவித்தார்கள். இதனால், மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தை சிறுபான்மையினர் வெறுத்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் அவரை தோற்கடிப்பதில் சிறுபான்மையினர் முக்கிய பங்குவகித்தார்கள். சிறுபான்மையினர் இன்றைய ஆட்சியில் நிம்மதியுடன் வாழலாம் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் வீண் போய்க் கொண்டிருப்பதனை காணக் கூடியதாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் இனவாதிகளினால்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை சட்டமும், சட்டத்தை பாதுகாக்கும் பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதனையும், இவற்றையிட்டு அரசாங்கமும், சிறுபான்மை மக்களின் கட்சிகளும். அவற்றின் பிரதிநிதிகளும் வாயடைத்துப் போய் இருப்பதனை என்னவென்று சொல்ல முடியும். சிறுபான்மை மக்கள் நாளுக்கு நாள் அச்சமான சூழலுக்குள் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதே சிறுபான்மையினரின் இன்றைய அவல நிலையாகும்.
சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை பௌத்த துறவிகள்தான் முன்னின்று நடத்துகின்றவர்கள். இவர்கள் சட்;டத்தை கையில் எடுத்துக் கொண்டு அராஜகம் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தினைப் போன்று இன்றைய அரசாங்கத்தின் காலத்திலும் இவாகள் சட்டத்தின் முன் சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், அவர்கள் தங்களின் இனவாத நடவடிக்கைகளை நாளுக்கு நாள் சூடாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். சட்டத்தின் அமுலாக்கம் பலவீனமடைந்து கொண்டு சென்றால் அராஜகம் பலமடைந்து கொண்டு செல்வதனை தவிர்க்க முடியாது. இதனையே மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் காண முடிந்தது. இன்றைய அரசாங்கத்திலும் அந்நிலை உருவாகிவிடுமா என்று அச்சம் கொள்ள வேண்டியுள்ளது.
30 வருட யுத்தத்தில் அமைதியிழந்து எல்லா வகையிலும் துன்பப்பட்ட நாட்டை மீண்டும் அத்தகையதொரு இருண்ட யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்கே பௌத்த இனவாதிகள் திட்டமிட்டுள்ளார்கள். இதற்கு பௌத்த துறவிகளை முன்னிலைப்படுத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள். பௌத்த துறவிகளின் சட்ட விரோத நடவடிக்கைகளை சட்டம் பெரும்பாலும் பாராமுகமாக இருப்பதே இதற்கு காரணமாகும். நாட்டில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி சிறுபான்மையினரை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டி விடுகின்ற வகையில்தான் பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அவர்கள் காணும் இடமெல்லாம் விகாரைகளை அமைப்பதற்கே திட்டமிடுகின்றார்கள். இவர்களின் இந்நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் துணையாக இருக்கின்றார்கள். இவ்வாறு அமைச்சர்கள் செயற்பட்டால் நல்லாட்சியை காண முடியாது. மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் அமைச்சர்கள் பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகளுக்கு துணை செய்தார்கள். இன்றும் அதே நிலைதான் என்றால் சிறுபான்மையினர் இன்றைய அரசாங்கத்தில் நல்லது நடக்கும் என்று எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்.
பௌத்த துறவிகளில் பலர் மிகவும் அமைதியாகவும், எல்லா மக்களையும் சமமாகவும் மதிக்கின்றார்கள். ஆனால், ஒரு சில துறவிகள்தான் சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுகின்றார்கள். இந்த சிறு தொகையினரிடமே சட்டம் தலை குனிந்து நிற்கின்றது. குழுவாக செயற்பட்ட இவர்கள் தற்போது தனியாகவும் சட்டத்தையில் கையில் எடுத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கச்சக் கொடி பிரிவில் (எல்லைக் கிராமம்) கால்நடைகளை மேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியை தமக்கு பயிர்ச் செய்கை பண்ணுவதற்கு தருமாறு மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அம்பிட்டிய சுமரத்ன தேரரோடு இன்னும் நான்கு பௌத்த துறவிகளும், சிங்கள மக்களில் சிலரும் இணைந்துதான் அம்பாரை கண்டி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் கிராம உத்தியோகத்தருக்கு அநாகரிகமான முறையில் பொலிஸ் அதிகாரியின் முன்னிலையில் கீழ்தரமான வார்த்தகளால் திட்டினார். அவ்வேளை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரியின் தலைமையிலான உத்தியோகத்தர் குழுவினரும் அந்த இடத்திற்கு சென்றனர். இதன் போது அரச காணிகளை அத்து மீறிப்பிடித்து பயிர்ச்செய்கையில் ஈடுபட விடுமாறும் அம்பாரை மாவட்டத்தில் தமது நிர்வாக சேவையினை பெற அனுமதிக்குமாறு கோரி கோசம் எழுப்பியுள்ளார். அரச காணி அத்து மீறலை தடுக்க நீ யார்? உன்னுடைய அப்பன் வீட்டுக்காணியா? அம்மா வீட்டுக்காணியா? ஏன் சிங்கள மக்களுக்கு வழக்கு வைத்தாய்? நீயார் இவற்றைச்செய்ய? தமிழர்கள் எல்லோரும் புலி என்று என்று சத்தம் போட்டதோடு, மிகவும் மோசமான, ஒரு துறவிக்கு பொருத்தமற்ற வார்த்தைகளையும் மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் நாவு கூசாமல் சொல்லியுள்ளார். இவ்வளவு நடந்தும் கிராம சேவகர் மிகவும் பொறுமையுடன் நடந்துள்ளார். அங்கு வருகை தந்த அதிகாரிகளும் பொறுமையுடன் செயற்பட்டுள்ளார்கள். ஆனால், இவ்வளவு நடந்தும் அங்கு காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து தங்களின் முன்னால் சத்தம் போட்ட பௌத்த துறவிக்கு முன்னால் கைககள் கட்டப்பட்டவர்கள் போன்று நின்றார்கள். பௌத்த துறவிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் இந்நாட்டின் நிலையாகும். இதே போன்றதொரு செயற்பாட்டை தமிழ், முஸ்லிம் மத குரு ஒருவர் செய்திருந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பார்.
இதே வேளை, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் அவரது விகாரைக்கு விசாரணைக்காக சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அவதூராக திட்டியதுடன், அவர் மீது தாக்குதலையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், 16.11.2016 அன்று தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியை அபகரிப்பதற்கு முற்பட்டுள்ளார். குறிப்பிட்ட காணியில் விகாரை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இங்கிருந்து நான் நகரமாட்டேன் என்றும் கூறி கலாட்டா செய்துள்ளார். இதன் போதும் கூட பொலிஸார் பார்வையாளராகவே செயற்பட்டுள்ளார். அங்கு பெருமளவிலான தமிழர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள். நல்ல வேளை, தமிழ் மக்கள் ஆத்திரப்படவில்லை.
மேலும், அவரது விகாரை அமைந்துள்ள பிரதேசத்தை அம்பாரை மாவட்டத்துடன் இணைக்குமாறும் கேட்டுள்ளார். இதன் மூலமாக அம்பாரை மாவட்டத்தில் சிங்களவர்களின் ஆதிக்கம் எவ்வாறுள்ளதென்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. தமது அடாத்தான நடவடிக்கைகளை மட்டக்களப்பு கச்சேரி மூலமாக செயற்படுத்த முடியாது. ஆனால், அம்பாரை கச்சேரி மூலமாக அதனைச் செய்யலாம் என்று குறிப்பிட்ட பௌத்த துறவி எண்ணுகின்றார்.
இவ்வாறு பௌத்த துறவிகள் சிறுபான்மையிருக்கு எதிராக பல இடங்களில் மிகவும் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் சொல், செயல், அங்கிகாரம் அனைத்து சிறுபான்மையினரை தாக்குவதாகவே உள்ளது. குறிப்பாக முஸ்லிம்களை நேரடியாகவே வம்புக்கு இழுக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக சிங்களவர்களை தூண்டிவிட எண்ணுகின்றார்கள். தமிழர்களும், முஸ்லிம்களும் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள், பயங்கரவாதிகள் என்று சிங்கள மக்கள் மத்தியில் மோசமான பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்;நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கோ, அவர்களின் பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கோ தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ஏனைய துறைசார் தலைவர்கள் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிங்கள மக்களிடம் சிறுபான்மையினரைப் பற்றி விதைக்கப்பட்டு வரும் நச்சுக் கருத்துக்களில் உண்மை இல்லையென்று சிங்கள மக்களிடம் ஆதாரங்களுடன் சொல்ல வேண்டியுள்ளது. இதனைச் செய்வதற்கு அரசாங்கமும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதே வேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரரின் அடாத்தான நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பௌத்த துறவிகளை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய பௌத்த துறவிகள் விடயத்தில் சட்டம் சும்மா தூங்கிக் கொண்டிருக்கையில் சிறுபான்மையின அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகள் என்று தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ், முஸ்லிம் மக்கள்தான் என்பதனை சிறுபான்மை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மக்களின் காலடிக்கு வருகின்றார்கள். தேர்தல் முடிந்ததும் மக்களின் பிரச்சினைகளை மறந்துவிடுகின்றார்கள். அதிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்தின் நடவடிக்கைகளில் மிகவும் பொடுபோக்காக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதாவது நல்லாட்சி அரசாங்கத்தில் விரிவடைந்து கொண்டு செல்வதனையும் காணக் கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக சிங்கள இளைஞர்களை தூண்டிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக, இளைஞர்களையும் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றார்கள். நாம் இன்னுமொரு பிரபாகரன் உருவாகும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்க முடியாதென்று தெரிவிக்கும் அளவிற்கு நல்லாட்சியில் இனவாதம் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதே வேளை, இன ஜக்கியம் நல்லிணக்கம் சம்பந்தமாக தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினை தந்தாலும் தான் இனியும் வாய் மூடி மௌனியாக இருக்க முடியாது. ஏற்கனவே பொதுபலசேனாவின் ஞானசார தேரர் கடந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் விசாரணை செய்து அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், நல்லாட்சியில் தொடர்ந்தும் சிறுபான்மையினர் மேலும் இவ்வாறு நிந்தனை செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தான் எழுதியுள்ள திறந்த மடலொன்றில் குறிப்பிட்டுள்ளார். இதனை சிங்கள புத்திஜீவிகளுக்கும் அனுப்பியுள்ளார்.
இதே வேளை, அண்மையில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக இடம் பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் மீது தற்கொலை மற்றும் தீ வைத்து எரித்து கொலை செய்வேன் என்று வன்முறையாகப் பேசிய டான் பிரியசாத் என்ற இளைஞனை கொழும்பு கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னரும் கூட வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூட இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை முன் வைத்துள்ளார். அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது.
பௌத்தம் என்ற ஆன்மீகத்திற்குள் ஒழிந்து கொண்டு அதனை தமது மேலாதிக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதன் பேரிலேயே தமிழ், முஸ்லிம்களின் காணிகளை வடக்;;கு, கிழக்கு மாகாணங்களில் பறித்துக் கொண்டார்கள். அவ்வாறு பறிக்கப்பட்ட காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இத்தகைய காணி அபகரிப்பு அம்பாரை, திருகோணமலை மாவட்டங்களில்தான் அதிகம் நடந்துள்ளன. சிறுபான்மையினரின் காணிகளைப் பறித்துக் கொண்டவர்கள் சிறுபான்மையினர்தான் தங்களின் காணிகளை பறித்து வைத்துள்ளதாக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நன்றி - விடிவெள்ளி (18.11.2016)

0 comments:
Post a Comment