(NFGG ஊடகப் பிரிவு)
"பெரும்பாண்மை  சிங்கள சமூக்கத்தை மகிழ்விப்பதற்காகவே சமஸ்டி
முறையினை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என
கூறுவது தவறானது.
சமஸ்டி அடிப்படையிலான அதிகார
பகிர்வு பற்றிய
அச்சம் முஸ்லிம் மக்கள்
மத்தியில் ஏன்
ஏற்பட்டது என்ற
யதார்த்தத்தினை நீங்கள்
புரிந்து கொள்ள
வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களின்
அடிப்படையிலும், தற்போது
இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கல் கட்டமைப்பில் தமக்கிழைக்கப்படும் அநீதிகள் மற்றும்
பாரபட்சங்கள் காரணமுமாகவே முஸ்லிம் மக்கள் சமஸ்டி முறையினை சந்தேகத்தோடும்
அச்சத்தோடும் நோக்குகின்றனர்" என NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்
இரா.சம்பந்தனிடம் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான
தேசிய முன்னணி (NFGG) எதிர்கட்சித்
தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) தலைவருமான திரு. இரா சம்பந்தன் அவர்களுடனான
விசேட சந்திப்பொன்றினை  நேற்று (31.10.2016) மேற்கொண்டது. NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்
அவர்களும் அதன் தலைமைத்துவ சபையின் செயலாளர் MBM.பிர்தௌஸ் அவர்களும் இரா.சம்பந்தன் அவர்களை
அவரது கொழும்பு இல்லத்தில் சத்தித்து பல முக்கிய விடயங்களை விரிவாக
எடுத்துக்கூறினர்.
குறிப்பாக, கடந்த 30.10.2016 அன்று  கொழும்பில் நடைபெற்ற வடமாகாண முஸ்லிம் சிவில்
சமூகத்தினுடனான சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் சில மாற்றுக் கருத்துக்களையும் , தெளிவுகளையும் மற்றும் சில கோரிக்கைகளையும்
நேரடியாக TNA தலைவரிடம்
முன்வைக்கு முகமாகவே இந்த விசேட சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
வடமாகாண முஸ்லிம்  மக்களின் மீள்
குடியேற்றம் தொடர்பில் எதிர்கொள்ளும் நடை
முறைப் பிரச்சினைகளை TNA தலைமைத்துவத்திடம் நேரடியாக எடுத்துக்கூறி
அதற்கான தீர்வுகளை கோருவதற்காக வட மாகாண சிவில் சமுகத்தினர் குறித்த சந்திப்பினை
கொழும்பில் ஏற்பாடு செந்திருந்தனர். இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்
சம்பந்தன் அவர்களும் அதன் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன்
அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.  வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த
முஸ்லிம் சமூக சிவில் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டு, தமது மீள்குடியேற்றம் தொடர்பிலும் ஏனைய பல
விடயங்களிலும் தாம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக தமிழ்தேசிய
கூட்டமைப்பின் தலைமைத்துவத்திடம் முன்னர் தெரிவித்தனர்.
NFGGயின் தவிசாளர்
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் மற்றும் அதன்
தலைமைத்துவ சபைச் தவிசாளர் சிறாஜ் மசூர் மற்றும் தலைத்துவ சபை உறுப்பினர்களான
முஜிபுர் ரஹ்மான் மற்றும் Dr.KM,ஷாஹிர் ஆகியோரும்
இதில் பங்கு பற்றி கருத்துக்களை அவதானித்ததோடு , NFGGயின் வடமாகாண சபை பிரதிநிதி அஸ்மின் அவர்கள்
இதற்கான ஒருங்கிணைப்பை செய்திருந்தார்.
இதன்போது , TNA தலைமைத்துவத்தினால் தெரிவிக்கப்பட்ட பதில்கள்
திருப்திகரமானதாக இருக்கவில்லை என்பதோடு அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
பல ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாக இருந்ததன் காரணமாக, குறித்த தினமே இரா. சம்பந்தன் அவர்களை தொடர்பு
கொண்ட NFGG யின் தவிசாளர்
அப்துர் ரஹ்மான் உடனடியான சந்திப்பொன்றுக்கான நேரத்தைக் கோரியிருந்தார்.
அதற்கமைவாகவே நேற்றைய சந்திப்பு இடம் பெற்றது.
இந்த சந்திப்பின்
போது, பல்வேறு விடயங்கள்
பற்றியும் மிக விரிவாக NFGG யின் தவிசாளர்
இரா.சம்பந்தன் அவர்களிடம் எடுத்துக் கூறினார்.  அவர் தெரிவித்ததாவது....
" வடமாகாண சிவில்
சமூகத்தினரின் குறித்த சந்திப்பின் நோக்கம் தாம் எதிர் கொள்ளும் அன்றாடப்
பிரச்சினைகளுக்கு உங்களது ஒத்துழைப்புடன் முடியுமான உடனடி தீர்வுகளைக்
காண்பதாகும். இதற்கு பதிலாக, சமஸ்டி
முறைத் தீர்வொன்றினை எல்லோருமாகச் சேர்ந்து பெற்றுக் கொள்வதுவே இதற்கான தீர்வு
எனக்கூறுவது பொருத்தமானதல்ல.
உங்கள் கைகளில்
இருக்கும் அதிகாரத்தினையும் நிர்வாக வாய்ப்புக்களையும் பயன்படுத்தி நமது மக்களின்
பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதுவே இங்கு எதிர்பார்க்கப்பட்டது. அந்த
வகையில், நேற்று உங்களால்
வழங்கப்பட்ட பதில் திருப்தியாக அமையவில்லை. 
மேலும், பெரும்பாண்மை  சிங்கள சமூக்கத்தை மகிழ்விப்பதற்காகவே சமஸ்டி
முறையினை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என
கூறுவதும் தவறானது.
சமஸ்டி அடிப்படையிலான அதிகார
பகிர்வு பற்றிய
அச்சம் முஸ்லிம் மக்கள்
மத்தியில் ஏன்
ஏற்பட்டது என்ற யதார்த்தத்தினை நீங்கள் புரிந்து
கொள்ள வேண்டும். கடந்த கால கசப்பான
அனுபவங்களின் அடிப்படையிலும், தற்போது
இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கல் கட்டமைப்பில் தமக்கிழைக்கப்படும் அநீதிகள் மற்றும்
பாரபட்சங்கள் காரணமுமாகவே முஸ்லிம் மக்கள் சமஸ்டி முறையை சந்தேகத்தோடும்
அச்சத்தோடும் நோக்குகின்றனர். மேலும் சாதாரண நிர்வாக விடங்களில்கூட தம்மீது
பாரபட்சம் காட்டப்படுவதாகவும் மக்கள் உணர்கிறார்கள். அதனை மேலும் ஊக்குவிக்கும்
வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலரின் இனவாதப் பேச்சுக்களும்
நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன என்பதும் துரதிஸ்டமானதாகும் .இவற்றை முடிவுக்கு
கொண்டு வருவதில் நீங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என்பதுவே மக்களின்
எதிர்பார்ப்பாகும்.  அவ்வாறு செய்வதன் மூலமே
தமிழ் முஸ்லிம் மக்கள்
மத்தியில் நம்பிக்கையையும் நல்லுறவையும் கட்டியெழுப்ப முடியும்.
மேலும், வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது
மிகத் தெட்டத் தெளிவான ஒரு இனச் சுத்திகரிப்பாகும். யுத்த காலங்களில் வட புல தமிழ்
மக்களின் இடப்பெயர்வும் கவலைக்குரிய மனித அவலங்களே. ஆனால்  முஸ்லிம்கள் மீது
இழைக்கப்பட்ட இன சுத்திகரிப்பு என்ற பாரிய அநீதியினை ஏனைய யுத்த கால அவலங்களோடு
சமாந்திரமாக நோக்கி அதன் பாரதூரத்தை குறைத்து மதிப்பிட முயற்சிப்பதனை ஏற்றுக்கொள்ள
முடியாது.  ஒவ்வொரு
சமூகங்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியின் தன்மையினையும் பாரதூரத்தினையும் உரிய
முறையில் ஏற்றுக்
கொள்வதன் மூலமாகவே ஒவ்வொரு
மக்களுக்குமான முறையான நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
தமிழ் மக்களின்
மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் நியாயங்கோரி தமிழ்
பிரதிநிதிகள் ஜெனீவா சென்ற போது அதற்கு முட்டுக்கட்டை போட முஸ்லிம் மக்கள் ஒரு
போதும் விரும்பவில்லை. தமது சந்தர்ப்பவாத அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம் அரசியல்
தலைவர்கள் சிலரே அதனைச் செய்தார்கள். அவர்கள் யார் என்பதும் உங்களுக்குத்
தெரியும். இந்தச் செயலை உரிய நேரத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய நாம்
கண்டித்தும் இருக்கிறோம்.
ஆனால் கவலைக்குரிய
விடயம் என்னவென்றால், தமிழ் மக்களின்
நீதி கோரும் நடவடிக்கைகளுக்கு குறுக்காக நின்ற அதே முஸ்லிம் அரசியல்வாதிகளோடு, சில பேச்சு வார்த்தைகளை இரகசியமாக நடாத்தி
விட்டு முஸ்லிம் சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின்
தலைமீது சில தீர்மானங்களை திணிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. வட கிழக்கு இணைப்பு
பற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துகளிலிருந்து இதைத்தான்
எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம் அரசியல்
வாதிகள் சிலரின் கருத்தை முஸ்லிம் சமூகத்தின் கருத்தாகக் கொள்ளக் கூடாது.  நீங்கள் நேரடியாக முஸ்லிம் சமூகத்தின் கருத்தை
தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே உங்கள் நிலைப்பாட்டை
நீங்கள் வகுக்க வேண்டும். இதைத்தான் தொடர்ந்தும் உங்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.
இன நல்லுறவு, சமூக நல்லிணக்கம் போன்ற அரசியல் கோசங்களை
ஊடகங்களிலும் மக்கள் சந்திப்புக்களின் போதும் தெரிவிப்பதனால் அதனை ஏற்படுத்த
முடியாது. தமிழ் முஸ்லிம்
மக்கள் தமக்குள் பேசித் தீர்த்து கொள்ளக்கூடிய விவகாரங்களை பரஸ்பரம் பேசி , நீதியுடன் அணுகி, தமக்குள் தீர்த்துக் கொள்ளக்கூடிய சூழலை
நீங்கள் உருவாக்க வேண்டும். இதன் மூலமே ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான பரஸ்பர
நம்பிக்கையினை தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாக்க முடியும். இதைத்தான்
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக உங்களிடம் வலியுறுத்தி வருகிறோம். துரதிஸ்ட வசமாக
இதுவரை அது நடக்கவில்லை.
எனவே இந்த
சந்தர்ப்பத்திலாவது இதில் நீங்கள் கூடிய அக்கறை செலுத்தி நேரடியாக தலையீடு செய்து
நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். 
மேலும்,  வட மாகாணத்தில் நாம் உங்களிடம் செய்து கொண்ட
ஒப்பந்தமானது வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தினையும் ஏனைய நலன்களையும்
பாதுகாப்பதனை அடிப்படை நோக்கமாக கொண்டதாகும். அதனை வட மாகாண சபை ஊடாக மேற்கொள்ள
வேண்டும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தோம்.அதற்கா
இவ்வாறு NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் இர.சம்பந்தனிடம்
தெரிவித்தார்.
இந்த கருத்துகளை
கவனமாக செவிமடுத்த TNA தலைவர் அவர்கள் NFGG முன்வைத்த கருத்தக்களிலுள்ள நியாயங்களை
ஏற்றுக்கொண்டதோடு , இவை தொடர்பில்
தாம் உரிய கவனம் செலுத்துவதாகவும் , மீண்டும் சந்தித்து கலந்துரையாடி சில
தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார். 

 
 
 
 
 
 
 
 
0 comments:
Post a Comment