• Latest News

    December 06, 2016

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம்

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர் பதவியேற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    திடீர் உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா இன்று இரவு உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
    இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் இடம்பெற்ற அ.தி.மு.க கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அ.தி.மு.க சட்டசபை கட்சித் தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
    இதனையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில், பதவியேற்றுள்ளதாக உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
    இதேவேளை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையெட்டி, தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top