தனது 17 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தை 10 வருடங்களுக்குப்பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.மகளை வல்லுறவுக்குட்படுத்திவிட்டு தலைமறைவாகியிருந்த தந்தை அவருடைய மகனின் இரகசிய தகவலுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளார்.களுபோவில வைத்தியசாலைக்கு அருகாமையில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டார்
.கடுகண்ணாவ வெல்லம்புற பிரதேசத்தைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர் 2007ஆம் ஆண்டு குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சில் மாதங்களின் பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தார்.மனைவியின் சரீரப்பிணை மூலம் வெளியில் வந்த அவர் கடந்த 10 வருட காலமாக மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு சுமார் 10 வருடங்கள் தலைமறைவாகியிருந்தார்.
வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காமல் இருந்தமையால் தனது தாய் தண்டனையை அனுபவிக்க வேண்டி ஏற்படுமென கருதிய மகன் தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி ஆவணமொன்றுக்கு கையொப்பமிட வேண்டுமென கூறியுள்ளார்.அதற்கு குறித்த சந்தேக நபரான தந்தை கையொப்பத்திற்கு பணம் தர வேண்டும்.பணத்துடன் களுபோவிலை வைத்தியசாலைக்கு அருகாமையில் வரவும் என கூறியுள்ளார்.பின்னர் இந்த தகவலை மகன் பொலிசாருக்கு தெரிவித்ததும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து போலி அடையாள அட்டை உட்பட பல ஆவண்ங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment