பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புமிக்க தலைவராக எப்போதும் செயற்பட்டு வருகின்றார் என்று அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சாட்சியமளிப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் நாட்டில் உயர்நிலை பதவியை வகித்த பிரதம நீதி அரசர் திருமதி சிராணி பண்டாரநாயக்க அவர்கள் பூச்சி புழுவைப்போன்று தூக்கிஎறியப்பட்டார். தமது அழுத்தங்களுக்கு உட்படாமையினாலேயே அவரை இவ்வாறு நடத்தினர்.
இதுபோன்றுதான் முன்னைய ஆட்சிக்காலத்தில் நாட்டில் களவு ஊழல்மோசடி என்பன அதிகரித்திருந்தன. தாம் நினைத்தவாறு செயற்;படுவதற்கு சிலருக்கு அதிகாரம் இருந்தன. தவறுவிழைவிப்போரை கைதுசெய்வதற்கு அதிகாரம் எவருக்கும் அன்று இருக்கவில்லை.
நாம் இன்று இந்த நிலையை மாற்றியமைத்துள்ளோம். இந்த மாற்றத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். எமது அமைச்சர்கள் பலர் இன்று ஆணைக்குழுவிற்கு சென்று சாட்டியமளித்துள்ளனர். என்னையும் வருமாறு அழைத்தனர். நாம் சென்று சாட்டியமளித்தோம். இந்த அழைப்பை கௌரவித்து நாம் செயற்பட்டோம். எமது பொறுப்பை நிறைவேற்றுவோம்.நாம் ஆணைக்குழுவிற்கு சென்றதால் நாம் தவறுகள் விளைவித்தவர்கள் என்பது அர்த்தமில்லை.
நான் தவறு விளைவிக்கவில்லை அதனால் பயப்படவில்லை. எங்கள் பிரதமர் சுயமாகவே தெரிவித்திருந்தார். தம்மிடம் சாட்சி பெறவேண்டுமாயின் எந்த சந்தர்ப்பத்திலும் சாட்டியமளிப்பதற்கு தயார் என்று தெரிவித்திருந்தார். எந்த நாட்டிலாவது அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு பொறுப்புடன் செயற்பட்டுள்ளாரா? என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment