சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய்க்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேங்காயின் உயர்ந்த பட்ச சில்லறை விலை 75 ரூபாவாகும். ஒரு கிலோ பருப்பின் விலை 125 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது.
உயர்ந்த பட்ச விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக சதோசவின் தலைவர் ரி.எம்.கே.பீ.தென்னக்கோன் தெரிவிக்கையில் புதன்கிழமையன்று கூடிய வாழ்க்கைச் செலவினக் குழுக் கூட்டத்தில் இது பற்றித் தீர்மானிக்கப்பட்டதாகவும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மேலும் பல தீர்மானங்களைவ வாழ்க்கைச் செலவினக் குழு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment