• Latest News

    November 27, 2017

    வங்கி ATM அட்டை தரவுகளை திருடி கொடுக்கல் வாங்கல்

    ங்கி ATM அட்டை தரவுகளை திருடி கொடுக்கல் வாங்கல்ளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் மக்கள் வங்கி தலைமையகத்தினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயல் தொடர்பாக இரத்தினபுரி குருவிட்ட அக்குரணை மக்கள் வங்கி கிளைகளில் CCTV கமரா கட்டமைப்பில் சந்தேகநபர்கள் இருவர் தொடர்பிலான காட்சிகள் பதிவாகியுள்ளன.

    இவர்கள் 3இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை ATM அட்டையின் மூலம் பெற்றிருப்பதாகவும் இவர்கள் தொடர்பான தகவல்களை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

    இது தொடர்பான தகவல்களை 011-2326670, 011-2320141 மற்றும் 011-2320145 என்ற தொலைபேசி ஊடாக தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வங்கி ATM அட்டை தரவுகளை திருடி கொடுக்கல் வாங்கல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top