சம்மாந்துறையின் தலைமகன் முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.ஏ. அப்துல் மஜீத் அவர்களின் 6வது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.
எம்.ஏ. அப்துல் மஜீத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கடசித்த தலைவர் இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
இந்த நிகழ்வில்.நினைவுப் பேருரையை ஒய்வு பெற்ற தென் கிழக்கு பல்கலைக் கழகம், ரஜரட்ட பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பிரதிப் பதிவாளர் முதுமானி, கவிஞர் மன்சூர் ஏ- காதிர் நிகழ்த்தினார். அத்துடன்
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர். எம்.ஐ.எம். மன்சூர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
இதேவேளை 4 சமூக சேவையாளர்களை பாராட்டி அப்துல் மஜீத் ஞாபகார்த்த விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்ட்து
இந்த நிகழ்வில் பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம்,முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுள்ளா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். நௌஷாட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ,எல்.எம். மாஹிர், மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, உலமா சபைகளின் தலைவர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள், மர்ஹும் அப்துல் மஜீதின் உறவினர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.







0 comments:
Post a Comment