கெக்கிராவ
கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் கரப்பிணி என தெரிவித்து
அவரை பாடசாலையில் இருந்து நீக்கியமை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு
அதிகார சபையினால் மேற்கோள்ளப்பட்ட விசாரணை அறிக்கை தற்போது சட்டமா அதிபர்
திணைக்களத்திடம் ஒப்படைபக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்று கொள்வதற்காக இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கெக்கிராவ கல்வி வலையத்தில் மடாட்டுகம
ரெவன என்ற வித்தியாலயதத்pல் தரம் 10 இல் கல்வி கற்ற மாணவி ஒருவர்
வற்றுபசியில் இருந்த வேலை வாந்தி எடுத்தன் காரணமாக அவர் கரப்;பிணியாக
இருந்தார் என்ற உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை சுமத்தி அவர் பாடசாலையில்
இருந்து வெளியேற்றப்படட்டதாக கூறப்படும் சம்பவம் சமீபத்தில் வெளியானது
.
இது தொடர்பாக அந்த பாடசாலையை சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
இதன் போது சம்பந்தப்பட்ட மாணவி
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் பாடசாலையில் இருந்து
நீக்கப்பட்டதினால் மனத்தாக்கத்திற்கு உள்ளானதன் காரணமாக 1955 ஆம் ஆண்டு
இலக்கம் 25 இலங்;கை குற்றவியல் சட்டத்தின் கீழ் 308 பிரிவின் கீழ் இவருக்கு
தவறு இழைக்கப்பட்டமை மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பில் தேசிய சிறுவர்
பாதுகாப்பு அதிகார சபையினால் சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment