வடக்கில்
மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள இயங்கவைக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படவேண்டும் என்று திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்றைய
தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவம் துறைமுகங்கள்
மற்றும் கப்பற்துறை தொழில் தொழில் உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி
ஆகிய அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை
விவாதத்தில் உரையாற்றுகையிலேயே திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இவ்வாறு
புறிப்பிட்டார்..
அவர் மேலும் உரையாற்றுகையில் 30
வருடகால யுத்தம் முடிந்து 9 வருடம் கடந்துள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்த
காலப்பகுதியில் மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் இது வரையில் இயங்கவில்லை.
இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இவற்றில்
பணியாற்றியவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி முதலானவை
வழங்கப்படவில்லை. இது குறித்து அரசாங்கம் கவனம் nசுலுத்தி உரிய நிhவாரணத்தை
பெற்று கொடுக்கவேண்டும்.
பெண்
தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லும் Nபுhது அவர்களின் பிள்ளைகளுக்கென முறையான
பாராமரிப்பு இல்லங்கள் இல்லை. இதனால் இவ்வாறான குடும்பங்களில் உள்ள
வளர்ந்த பிள்ளைகள் இவர்களை பாராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்
வளர்ந்தவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு
மாவடட்த்தில் வெளிச்சவீடு இல்லாததினால் மீனவர்கள் பெரும் பாதிப்பை
எதிர்நோக்குகின்றனர். எனவே இங்கு ஒரு வெளிச்சவீட்டை அமைத்து தருமாறு
துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சிடம் கேட்டுகொள்கின்றேன்.
யுத்தத்தினால்
வடக்கில் பலர் வங்கிகளில் வைத்திருந்த தங்க நகைகளை இழந்துள்ளனர். இதற்கான
பற்றுச்சீட்டுகளை வைத்துள்ளனர். இவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அரசாங்கம்
கொடுக்கவேண்டும்.
பாராளுமன்ற
உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மட்டகளப்பு மாவட்டத்தின் வறட்சி மற்றும்
வெள்ளபெருக்கின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முறையான அனர்த்த
முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குடிநீர் பிரச்சினைக்கும் இவ்வாறான ஒரு நடவடிக்கை முன்னெடுப்பது மிக முக்கியமானதாகும்.
கடந்த
காலங்களில் தொழில் வாய்ப்பை வழங்குவதில் பாரப்பட்ச்சம் காணப்பட்டது.
இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடிக்ககூடாது. எனவே தொழில்வாய்ப்பை வழங்கும்
திட்டத்தில் பொதுவான ஒரு கொள்கை பின்பற்றப்படவேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ன சிங்கம்
வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இளைஞர்கள்
வேலைவாய்ப்புக்களை தேடிகொள்ளவதில் பெரும் சிரமம் அடைகின்றனர். தற்போது
வேiலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வுடக்கு கிழக்கு இளைஞர்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார்
தோட்ட நிர்வாகங்களின் இலாபத்தை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு
செயற்படுகின்றன. பல தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. இவை தரிசு நிலங்களான
காணப்படுகின்றன.
நுpர்வாகங்களின் இவ்வாறான நடவடிக்கையினால் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது.
இவர்களின்
நலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இவர்கள் இன்று உரிமையாளர்கள் போல்
செயற்படுகின்றனர். இது தொடர்பில் அரசு உடனடியாக கவனம் செலுத்தவேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா
வெள்ள
அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானங்கள் தேவை
என்பதையும் அதற்கான விழிப்புணர்வுகள் அனைத்து மட்டங்களிலும் எமது
மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுவதை அமைச்சு உறுதிபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்
கொள்கின்றேன்.
அண்மையில்
தென் பகுதியில் ஏற்பட்டிருந்த வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் போன்ற
அனர்த்தங்கள் பாரியளவிலான மக்களைக் காவு கொண்டிருந்த துயரங்களை நாம்
மறந்துவிடக்கூடாது.
அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் மீண்டும் ஏற்படாத வகையிலான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
கடந்த
காலங்களில் பல்வேறு இயற்கை அனர்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள
பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும்
உரிய இடங்களில் மீளக் குடியேற்றப்படாத நிலை உண்டு.
கடந்த மே
மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின்போது மத்துகம வோகன் தோட்டக் கீழ்ப்
பிரிவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள 35 குடும்பங்களுக்கான வீட்டுத்
திட்டம் இன்னும் இழுபறி நிலையில் இருப்பதாகவே தெரிய வருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன 1954 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சாப்பு சட்டம் மற்றும் அலுவரகம் சட்டத்தை திருத்துவதற்கு முன்மொழிவு இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு
திருத்தங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் ஊழியர்களினன் பணிநேரம் விடுதுறை
காலம் ஊழியர் சேமலா நிதி உள்ளிட்டவை பிரச்சினைக்கு உள்ளாகும். இந்த சட்டம்
திருத்தப்பட்டால் சர்வதேச தொழில் சட்டங்கள் என்பவற்றுக்கிடையில் முரண்பாடு
ஏற்படக்கூடும்.
பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம்
தோட்ட
பகுதிகள் இன்று காடாகின்றன. இதனால் மலையகத்தில் மிருக காட்சி சாலைகளை
நடத்தகூடிய அளவுக்கு மிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
சிறுத்தைகள்
மாத்திரம் இன்றி தற்போது புலிகளும் நடமாடுகின்றன. அட்டைகளும்
அதிகரித்துள்ளன. தொழிலாளர்களிடம் இருந்து பெரும் அளவு இரத்தத்தை இவை
ஊறுஞ்சுகின்றன. இவ்வாறான சிரமமான சூழ்நிலைக்கு மத்தியிவேயே இவர்கள் தொழில்
புரிகின்றனர்.
பாராளுமன்ற
உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் பெருந்தோட்டத் தொழிலாளர் நலன் தொடர்பாக
செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இன்னும் குறைப்பாடுகள்
காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்டப்பட்ட விடயங்கள் நடைமுபை;படுத்தபட
வில்லை இது தொடர்பில் பெருந்தோடட்ட அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.

0 comments:
Post a Comment