• Latest News

    November 27, 2017

    காதலியை கரம்பிடிக்கும் இளவரசர் ஹாரி

    இளவரசர் ஹாரி, தனது காதலியும் அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவை திருமணம் செய்து கொள்வார் என்று இளவரசர் சார்லஸ் அறிவித்துள்ளார்.
    அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ள இளவரசர் ஹாரி, மார்க்கெல்-ஐ அடுத்த இளவேனிற்காலத்தில் திருமணம் செய்துகொண்டு, லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் உள்ள நாட்டிங்ஹாம் மாளிகையில் அவரோடு வசிக்கவுள்ளார்.
    2016 இல் இருந்து காதலித்து வரும் இந்த ஜோடி, இந்த மாத துவக்கத்தில் நிச்சயம் செய்துகொண்டனர்.
    இந்த நிச்சயத்தை அறிவிப்பதில்தான் மகிழ்ச்சியடைவதாகவும் மார்க்கெலின் பெற்றோரின் ஆசி தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் ஓர் அறிக்கையில் ஹாரி கூறியுள்ளார்.
    இவர்களது திருமண நாள் பற்றிய விவரங்கள் "சிறிது காலத்திற்கு பின்னர் அறிவிக்கப்படும்" என்று வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது இரண்டாவது மனைவியின் அதிகாரபூர்வ இல்லமான கிளாரன்ஸ் ஹவுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    திருமணத்திற்கு பின்னர் மார்க்கெல், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினராகிவிடுவார்.
    பிரிட்டன் அரசி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோருக்கு இந்த திருமணம் மகிழ்ச்சியளிப்பதாகவும் ஹாரி மற்றும் மேகன் என்றும் இன்பமாக வாழ அரசி மற்றும் இளவரசர் பிலிப் வாழ்த்துவதாகவும் பக்கிங்காம் அரண்மனை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காதலியை கரம்பிடிக்கும் இளவரசர் ஹாரி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top