முகப்புத்தகத்தில் 19வயதான பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படத்தை சமூக இணையத்தளத்தில் வெளியிட்டதான குற்றச்சாட்டு மற்றும் முறைகேடான புகைப்படங்களுடனான கையடக்கத்தொலைபேசியொன்றை வைத்திருந்ததான இரண்டு குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு கடூழிய இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட நீதவான் டீஏ றுவான் பத்திரண இந்த சிறைத்தண்டனையை விதித்தார். பாதிக்கப்பட்ட யுவதிக்கு 5ஆயிரம் ரூபா நஷடஈடும் ஒரு குற்றச்சாட்டுக்கு 1500 ரூபா வீதம் 3000 ரூபா தண்டப்பணத்தை செலுத்துமாறும் உத்தரவிட்டார். இந்த தண்டப்பணம் செலுத்தப்படாதவிடத்து 6 மாத சிறைத்தண்டனையையும் விதித்திருந்தார்.
நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான வாலிபருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிரான குற்றச்சாட்டு இந்த வருடத்தில் மே மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டை யக்கல சியன உயன என்ற பிரதேசத்தை சேர்ந்த யுவதியே பதிவுசெய்திருந்தார்.

0 comments:
Post a Comment