மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் நகரில் உள்ள திருமண வீடொன்றில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட பலர், உடல் உபாதைக்குள்ளாகிய நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமண வீடொன்றில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட பலர் வைத்தியசாலையில் அனுமதி !
இன்று (26.11.2017) காலை 11 மணிவரை சுமார் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர், பள்ளியடி வீதி திருமண வீடொன்றில் வெள்ளிக்கிழமை (24.11.2017) உணவு உண்டவர்களே, தற்போது உடல் உபாதைக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், எவரும் கவலைக்கிடமான நிலையடையவில்லை என்று, பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம். பழீல் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான, விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 comments:
Post a Comment