2017ம் ஆண்டுக்கான தேசிய மீலாத்தின கனிஷ்ட பிரிவில் தமிழ், ஆங்கில
கட்டுரைப் போட்டியில் முதலாம், மூன்றாம் இடத்தினை நிந்தவூர் அல்
மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள்
தேசிய ரீதியில் இடங்களை பெற்று சாதனைபடைத்துள்ளார்கள்.
தேசிய ரீதியில் இடங்களை பெற்று சாதனைபடைத்துள்ளார்கள்.
இவர்கள் கடந்த மாதம் அல் அக்ஸா வித்தியாலத்தில் நடைபெற்ற மாகாண
மட்ட ரீதியில் குறிப்பிட்ட போட்டியில் முதலாம் இடங்களை பெற்றதோடு
இம்மாதம் 4,5ம் திகதிகளில் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர்
வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய மட்டப் போட்டியில் கனிஷ்ட
பிரிவில் தமிழ் கட்டுரையில் முதலாம் இடத்தினை அப்துல் காதர்
பாத்திமா சுமையா இல்மியும் கனிஷ்ட பிரிவில் ஆங்கிலக் கட்டுரைப்
போட்டியில் முகம்மது நஜீப் ஸீறத் அலா மூன்றாம் இடத்தினையும்
பெற்று கல்முனை கல்வி வலயத்திற்கும் தமது சொந்த ஊரான
நிந்தவூருக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இதனையொட்டி இச்சாதனையாளர்களை கௌரவிக்கும்முகமாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் MS.அப்துல் ஜலீல் மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள்,பாடசாலை அதிபர்,பிரதி அதிபர்,உதவி அதிபர்கள்,ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவிகளால் பெரும் வரவேற்பு அழிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

0 comments:
Post a Comment