• Latest News

    November 24, 2017

    சாய்ந்தமருதில் இப்படியும் ஒரு போராட்டம்

    அக்தர் -
    இப்படியும் ஒரு போராட்டம் இன்று சாய்ந்தமருதில் நடைபெற்றது. பார்க்கின்றவர்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு உள்ளுராட்சி சபை வழங்க வேண்டுமென்று பல்வேறு பட்ட போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    சாயந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை வேண்டுமென்று ஆர்ப்பாட்டம், வீதி மறியல் போராட்டம், பொதுக் கூட்டம் என போராடியவர்கள் இன்று வித்தியாசமான வகையில் போராட்டத்தை மேற் கொண்டார்கள்.

    சாய்ந்தமருது மாட்டு வண்டிச் சங்கத்தினர் தமது பங்களிப்பை செய்யும் வகையில் இன்று மாலை 04 மணியளிவில் மாட்டு வண்டி ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டார்கள். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் முன் வாசலில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பிரதான வீதி ஊடாகச் சென்று மாளிகைக்காடு வீதியால் சென்று கடற்கரை வீதி வழியாகச் சென்று, ஊரின் ஏனைய குறுக்கு வீதிகள் தோறும் பயணித்து மீண்டும் பெரிய பள்ளிவாசலை அடைந்தது.

     மோட்டார் சைக்கிள் பவனியும் இணைந்தாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டார்கள். நீண்ட காலத்திற்குப் பின்னர் மாட்டு வண்டிகளின் வரிசைகளை காணக் கூடியதாக இருந்தது.

    சிறுவtர்களுக்கு இந்த ஊர்வலம் ஒரு புதமையாகவும் இருந்தது. சில சிறுவர்கள் துள்ளிக் குதித்து இரசித்தார்கள். அவர்களின் வாழ்வில் முதலாவது மாட்டு வண்டி ஊர்வலம் இதுவாகும்.

    மர்ஹும் அஸ்ரப்பின் காலத்தில் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மாட்டு வண்டிகளின் ஊர்வலம் இடம்பெற்று அதன் மூலமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    எது எப்படியாக இருந்தாலும் இன்றைய மாட்டு வண்டி ஊர்வலம் பலரினது கவனத்தை ஈர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    சாய்ந்தமருது மக்கள் உள்ளுராட்சி சபையை பெறும் வரை தமது போராட்டத்தை நிறுத்த மாட்டார்கள் என்றும் தெரிவிகின்றது.  இன்னும் போராட்டங்கள் புது வடிவங்களைப் பெறலாம்.









    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதில் இப்படியும் ஒரு போராட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top