• Latest News

    November 25, 2017

    காபி கல்லீரலுக்கு நல்லதா?

    மிதமான காபி அருந்துவது பாதுகாப்பானது என்றும், அதுபோல, ஒரு நாளைக்கு மூன்று, நான்கு கோப்பைகள் காபி அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது என்று, அண்மைய ஆய்வறிக்கை விவரித்துள்ளது.
    இது பி.எம்.ஜெ. சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
    அதே நேரம், அதிகப்படியான காபிகளை கர்ப்பக் காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்வது உடல்நலத்திற்கு தீங்கானது, என்கிறது இந்த ஆய்வறிக்கை.உடல்நலக் காரணிகளுக்காக மக்கள் காபி அருந்த தொடங்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளது.

    சவுதாம்ப்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித உடலின் காபியின் ஆதிக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளார்கள்.
    காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவாக தாக்குகின்றன. குறிப்பிடதகுந்த பலன் என்னவெனில், காபி அருந்துபவர்களை கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவாக தாக்குகின்றன. குறிப்பாக கல்லீரல் புற்றுநோய்.
    ஆனால்,சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் பால் ரொடரிக், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியர் ஆவார். அவர் காபி அருந்துவதால் மட்டும் இந்த மாற்றம் ஏற்படுகிறதா என்பதை சொல்ல முடியாது என்கிறார்.
    மேலும் அவர், வயது, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவரா, உடற்பயிற்சி செய்பவரா, என்பது எல்லாம் ஒருவரது ஆரோக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்கிறார்.
    காபி குறித்து அண்மையில் வந்த பல ஆய்வறிக்கைகளுக்கு துணையாக இந்த ஆய்வும் உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காபி கல்லீரலுக்கு நல்லதா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top