துருக்கியின் தென்மேற்கு பகுதியில் சுமார் 5.1 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முகலா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
இதேவேளை, கடந்த இரு நாட்களுக்கு முன்னரும் இதே பகுதியில் சுமார் 5.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment