பாடசாலை வகுப்பறைகளில் இருள்
சூழ்ந்துள்ளதால் பரீட்சையெழுதும் மாணவர்கள் மெழுகுவர்த்தியை வைத்து
பரீட்சையெழுதிய சம்பம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால்
கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் மாணவர்களுக்கான
மூன்றாம் தவணைப்பரீட்சை நடைபெற்று வருகின்றது.
காலைநேரத்தில்
இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வகுப்பறைகள் இருளடைந்து
காட்சியளிக்கின்றன. பல பாடசாலைகளில் மாணவர்கள் மெழுகுவர்த்தி
வெளிச்சத்திலேயே பரீட்சை எழுதிவருகின்றமையை அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு, குருமண்வெளி சிவசக்தி
வித்தியாலய மாணவர்கள் இவ்வாறு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரீட்சை
எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment