• Latest News

    November 29, 2017

    நான் ஜெயலலிதாவின் மகள் என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும்.. அம்ருத்தா பரபர!- வீடியோ

    டெல்லி: ஜெயலலிதாவின் மகள் தான்தான் என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும் என அம்ருத்தா தெரிவித்துள்ளார்.
    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் என உச்சநீதிமன்றத்தில் பெங்களூரை சேர்ந்த அம்ருத்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
    அதற்கான டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் தங்கள் குடும்ப வழக்கப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
    இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவித்தவிட்டது. ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் தான் தான் என கூறி ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார்.
    இதையடுத்து தமிழ் தொலைக்காட்சிகள் அவரை வரிசைக் கட்டி நேர்காணல் செய்து வருகின்றனர். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது வளர்ப்பு தந்தையான பார்த்தசாரதி தான் இறக்கும் போது இந்த உண்மையை சொன்னதாக அம்ருத்தா கூறினார்.
    மேலும் தனது உறவினர்களும் தான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறியதாக தெரிவித்தார். நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.
    ஜெயலலிதா தன்னை தாயன்புடன்தான் கட்டி தழுவியுள்ளார் என்ற அவர் ஆனால் நான்தான் அதனை புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.
    சசிகலாவுக்கு பயந்துதான் ஜெயலலிதா தன்னை மறைத்து வளர்த்ததாகவும் வேறு யாராலும் அச்சம் இல்லை என்றும் அம்ருத்தா கூறினார்.
    ஜெயலலிதாவை போயஸ் கார்டன், தலைமைச் செயலகம், சிறுதாவூர் பங்களா, திராட்சை தோட்டம் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும் அவர் கூறினார். ஜெயலலிதாவின் தங்கை மகள் என்று கூறியே தன்னை மறைத்து வளர்த்து வந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
    குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் கூறி வரும் நிலையில் தான் யார் என்று தெரிந்து கொள்ளவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். முதலில் மகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அம்ருத்தா தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நான் ஜெயலலிதாவின் மகள் என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும்.. அம்ருத்தா பரபர!- வீடியோ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top