முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உறவை ஏற்படுத்தும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.
மிகவும் தீர்க்கமான இந்தப் பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த வார இறுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த போதிலும் சில விடயங்கள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான தொடர்பு கடந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து முறிவடைந்ததை அடுத்து இவ்விருவரையும் இணைப்பதற்கான பல கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
இருந்த போதிலும் அத்தனை கட்டப்பேச்சுக்களும் இறுதியில் தோல்வியில் முடிவடைந்தன.
இந்த நிலையிலேயே மீண்டும் இந்தப் பேச்சு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment