களுத்துறை – அளுத்கம பிரதேசத்தில் நடைபெறவிருந்த துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.50 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அளுத்கம நகரிலுள்ள வெளிநாட்டு பணப்பரிமாற்று நிலையத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் மூவர், ஊழியர்களை அச்சுறுத்தி கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.
எனினும் அது பலனளிக்காத படியினால் குறித்த வர்த்தக நிலையத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த கொள்ளையர்கள், முகத்தை முழுமையாக தலைக் கவசத்தில் மூடியிருந்த படியினால் அடையாளம் காணமுடியவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகைள அளுத்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment