எமது ஊடகவியலாளர்கள் தற்போது எவ்வித அச்சமும் இன்றி ஜனாதிபதியை விமர்சிக்கின்றனர். அன்று இவ்வாறு செய்திருந்தால், அந்த ஊடகவியலாளர்களை கடத்தியிருப்பார்கள். லசந்த விக்ரமதுங்கவிற்கும் இதே நிலை ஏற்பட்டது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றிய அமைச்சர்,
அவரை ஏன் கொன்றார்கள். அவர் கோட்டாபயவின் மிக் விமான கொடுக்கல் வாங்கலை வெளிப்படுத்தினார். மின் விமானம் என்றால் என்ன?. அதன் பெறுமதி 7.2 மில்லியன் டொலர்களாகும். ஆனால் ஆவணங்களில் 14.24 மில்லியன் டொலர்கள் என பதிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு மிக் விமானத்திற்கு 2 மடங்கு சூறையாடினார்கள். லசந்த இதனை தனது பத்திரிகையில் இது தவறு, இதுதான் உண்மையான விலை எனவும் 2 பக்க கட்டுரை எழுதினார். சிந்தித்து பாருங்கள் ஒரு விமானத்தில் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று. லசந்தவிற்கு ஒப்பந்தத்தின் உண்மையான பிரதி கிடைத்தது. இதனை தனது பத்திரிகையில் வெளியிட தயாரானார். அதற்கு முன்னர் அவரை கொலை செய்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment