ஆளும் கட்சிகளுக்கு இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால் தேசிய அரசாங்கம் கலைவதற்கும் ஏதாவது ஒரு கட்சி ஆட்சியை தனித்து அமைப்பதற்கும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.
தனித்து ஆட்சியை அமைத்துக் கொள்வதற்கான இரகசியப் பேச்சுவார்த்தை ஒன்றினை ஐ.தே.க செய்துள்ளது. இதில் கலந்து கொண்ட பலரும் நாங்கள் தனித்து ஆட்சியை அமைப்போம் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.
இதே வேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து ஆட்சியை அமைப்பதற்குரிய பேச்சுக்களை மேற்கொண்டுள்ளது. இதற்காக மஹிந்தராஜ பக்ஷவுடன் நெருக்கமானவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
பாராளுமன்றத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் பலம் இப்போதைக்கு ஐ.தே.கவிறகே உள்ளது. ஐ.தே.க 107 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலும், ஐ.தே.க ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

0 comments:
Post a Comment