நாட்டில் எந்த வகையிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கனியவள அபிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
சிலர் நாட்டில் எரிபொருள் தடடுப்பாடு இருப்பதாக பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் பாவனையாளர்கள் தேவையற்ற வகையில் எரிபொருள் நிலையங்களுக்கு சென்று எரிபொருளை சேரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டில் எந்தவகையிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
இதனால் தேவையற்ற ரீதியில் குழப்பமடைய வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். வெளிநபர்களிடம் தேவையற்ற வகையில் கூடிய விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யவேண்டாம் . தேவையான அளவு எரிபொருள் கைவசம் உள்ளதினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கின்றோம்.
இதுதொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமாயின் 24 மணித்தியாலங்களும் செயற்படும் 0115455130 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தயவுசெய்து தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் . எமது களஞ்சியசாலைகளுக்கு வரும் அனைத்து பவுசர்களுக்கும் எந்தவித தாமதம் இன்றி எரிபொருள் வழங்கமுடியும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றோம் .
0 comments:
Post a Comment