சர்வதேச விசேட தேவை உடையவர்களுக்கான தினம் (30.11.2017) கல்வி அமைச்சின் மூலமாக பத்தரமுல்லை அபே கமவில் கொண்டாடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சின் விசேட தேவை உடைய மாணவர்களுக்கான பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அதிகாரிகள் விசேட தேவை உடைய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது விசேட தேவை உடைய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உப கரணங்கள்,அவர்களுக்கான வாத்திய கருவிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்
கல்வி அமைச்சில் இந்த பிரிவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த பிரிவை ஏனைய மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகலுடனும் முடிந்தால் அதற்கு மேலாகவும் இதனை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.ஏனென்றால் இந்த பிள்ளைகள் அனைவரும் இறைவனின் குழந்தைகள்.அவர்களை நாங்கள் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஓவ்வொரு வருடமும் டிசம்பர் 03 ஆம் திகதி மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய தினமாக பெயரிடப்பட்டுள்ளது.இவ்வேலைத்திட்டம் இன்று 2017.11.30 அபே கம வளாகத்தில் மகாவலவ்வ நாட்டிய மண்டபத்தில் நடைபெறுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.இத்தேசிய தின விழாவில் தொனிப்பொருளானது சிறந்த நிலைபேறான சமூகத்தை நோக்கி செல்லுதல் என்பதாகும்.
இதற்கு இணைவாக கல்வி அமைச்சினால் தேசிய நினைவூட்டல் வாரம் எனப் பெயரிடப்பட்டு அதற்குரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.நவம்பர் 27 ஆம் திகதி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் சமய நிகழ்சிகளில் கலந்துக் கொள்ளுதல், தேசிய தினத்தையொட்டி சொற்பொழிவை நடாத்துதல்.நவம்பர் 28 ஆம் திகதி மேற்கூறிய ஆக்கங்களை முன்னிலைப்படுத்தல் (சித்திரம், பாட்டு, நடனம்)நவம்பர் 29 ஆம் திகதி வலய மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாடசாலையில் மாற்றுத் திறனாளிகளின் திறமையை வெளிக்கொனரும் கண்காட்சிகளை நடாத்துதல்
நவம்பர் 30ஆம் திகதி கல்வி அமைச்சின் பிரதான வைபவம் பத்தரமுல்லை பெலவத்த அபே கம வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது,
இன்றைய தினம் மாற்றுத் திறனாளிகள் உள்ள பாடசாலைக்கு கல்வி உபகரணத் தொகுதிகளை வழங்குதல்.எதிர்வரும் டிசம்பர் 01, 25 ஆம் திகதிகளில் மாற்றுத் திறனாளிகளின் உதவியோடு மரக் கன்றுகளை நாட்டுதல், டிசம்பர் 03 ஆம் திகதி முக்கிய நிகழ்வாக சமூச சேவை, சமூக நலன் மற்றும் மலைநாட்டு உரிமைகளுக்கான அமைச்சு மூலமாக ஜனாதிபதி தலைமையில் திவுலபிட்டிய பொது விளையாட்டு நிழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இன்று நடைபெறுகின்ற நிகழ்சியின் போது விசேட தேவைகளுக்கான பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை இலகு படுத்துவதற்காக அந்த பாடசாலைகளில் 300 விசேட கல்வி பிரிவுகளுக்கு 150 மில்லியன் ரூபா பெறுமதியான தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உபகரணங்களை வழங்குதல் மற்றும் தேசிய பாடசாலைகளில் 19 விசேட கல்வி பிரிவுகளை புதுப்பித்து மற்றும் நவீனமயப்படுத்துவதற்கான காசோலைகளும் இன்று வழங்கி வைக்கப்படுகின்றன.
இதற்காக கல்வி செயலாளர், கல்வி இராஜாங்க செயலாளர் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாகாண மற்றும் வலய விசேட கல்வி இணைப்பு உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை பாராட்டிற்குறியதாகும்.
விசேட தேவையுடைய மாணவர்கள் பாடசாலை பிள்ளைகளுடன் கல்வி நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ளும் போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைப்பது மற்றும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை இலகுவாக்குவதற்கும் கல்வி மட்டத்தை உயர்த்துவதற்கும் இந்த திணைக்களத்தின்; குறிக்கோளாகும். இங்கு கணனிகளோடு பிரேல் எனும் மென்பொருள், வீடியோ கமரா, (USB / pen drive) ஸ்மாட் அலுமாரிகள், காட்ரீடர், ஹெட் போன் மற்றும் LED Tv போன்ற தகவல் தொடர்புடைய தொழில்நுட்ப பொருட்களை பகிர்ந்தளிக்கவும் நாங்கள் அமைச்சி என்ற வகையில் தீர்மானித்திருக்கின்றோம்.
விசேட தேவைகளுடைய மாணவர்களுக்காக அரசாங்கத்தின் மூலமாக வருடந்தோறும் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டுகளில் இருந்து அரசாங்க பாடசாலைகளில் விசேட கல்வி பிரிவின் நவீன மயப்படுத்ததுல் மற்றும் புதுப்பித்தல், புதிய விசேட கல்வி பிரிவுகளை நிர்மானித்தல், கல்விப் பொருட்களை வழங்குதல் மாகாண மட்டத்தில் மூக்கு கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் உபகரணங்களை வழங்குதல், விசேட கல்வி முகாம்களை நடாத்துதல், விசேட கல்வி தொழில் தொடர்புடைய மனித வள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவும் நாம் தீர்மானித்திருக்கின்றோம்.
2017 ஆம் வருடத்தில் விசேட கல்வி தொழில் சார் 25 பேரை தென் கொரியா விசேட பயிற்சி வேலைத்திட்டமும் 2017.10.29 – 2017.11.11 திகதி வரை செயற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டம் 2019, 2020 வரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன் JICA வேலைத்திட்டத்தின் மூலமாகவும் விசேட கல்வி தொழிலாளர்களுக்கிடையே அறிவை பகிர்ந்துக் கொள்ளுதல் மற்றும் கல்வியை வலுவூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு 2018 ஆம் வருடத்திலிருந்து மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும் கல்வி அமைச்சி முடிவுசெய்துள்ளது.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசேட தேவை உடையவர்களுக்கான தினம் நேற்று (30.11.2017) கல்வி அமைச்சின் மூலமாக பத்தரமுல்லை அபே கமவில் கொண்டாடப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சின் விசேட தேவை உடைய மாணவர்களுக்கான பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அதிகாரிகள் விசேட தேவை உடைய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment