சர்வதேச ரீதியிலும் இலங்கை என்ற ரீதியிலும் பெண்களின் உழைப்பு சக்தி மிகவும் முக்கியமானதென்று நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறும் வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போதே இதனை மேம்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன்போது பெண்களின் பலம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் விளக்கமளித்தார்.
தற்காலிகமாக இதற்கு பழைய தேர்தல் முறை பொருத்தமானதாகும். நாமும் இதற்கே உடன்படுகின்றோம். பெண்களுக்கு உள்ள சந்தர்ப்பம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் உண்டு.
உலகலாவிய ரீதியிலும் இலங்கை என்ற ரீதியிலும் பெண்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானதாகும். மகளீர் படையணி சக்தி மிகவும் முக்கியமானதாகும். மகளீர் படையணியை மேம்படுத்த வேண்டும்.
பெண்களுக்காக சிறந்த சேவையை மேற்கொள்ளக்கூடிய இடங்களை மேம்படுத்தவேண்டும். இந்த நிலையயை ஏற்படுத்த சட்டத்தின் மூலம் செயற்படவேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment