• Latest News

    November 14, 2017

    உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அதிகரிப்பு

    உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது.

    உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி 24 மாநகரசபைகள், 42 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் என உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை 341 ஆகும்.

    ஏற்கனவே 23 மாநகர சபைகள் , 41 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள் என 336 உள்ளுராட்சி சபைகளுக்கும் விகிதாசார ரீதியாக 4,486 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.

    உள்ளுராட்சி சபைகள் தேர்தல் சட்டத்தில், தெரிவு வட்டாரம் 60 சத வீதம் விகிதாசாரம் 40 சத வீதம் என திருத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,356 அதிகரித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அதிகரிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top