- பைஷல் இஸ்மாயில் -
ஏறாவூர் ஜிம்மியத்துல் உலமா சபையினருக்கும், நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயிலுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை நகர சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
எமது மர்க்கத்திற்கு எதிரான விடயங்களில் நாம் ஆதரவு வழங்காமல் அதனை தடுப்பதற்கு எங்களுடன் இணைந்து செயற்படவேண்டும் எனவும், குறிப்பாக பெருநாள் தினங்களில் களியாட்ட நிகழ்வுகளை குறைத்து மார்க்கம் சார்பான நிகழ்வுகளை மிக்க கூடுதலாக நடாத்தி எமது மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.
அத்துடன் அனர்த்த காலங்களில் எமது பிரதேச மக்களை பாதுகாக்கின்ற விடயங்களிலும், கல்வி, கலாச்சாரம், சமூக விழுமியங்கள் போன்ற விடயங்களில் நகரை முன்னேற்றுவதற்காக நகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சகல வேலைத்திட்டங்களுக்கும் தங்களின் பரி பூண ஒத்துழைப்புக்களை வழங்க ஜிம்மயத்துல் உலமா சபையினர் எங்களுடன் கைகோர்த்து செயற்படவேண்டும் என்று நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் இதன்போது தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபைப் பிரிவில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகள், கல்வி, கலாச்சார விடயங்கள் மற்றும் மார்க்கம் தொடர்பான விடயங்கள் அனைத்துக்கும் தங்களின் ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாக ஜிம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.எஸ்.எம்.நிராஸ் இதன்போது தெரிவித்தார்.
இச்சந்திப்பில், தலைவர் எம்.எஸ்.எம்.நிராஸ், செயலாளர் எஸ்.ஏ.நளீம், பொருளாளர் யு.எல்.அப்துல் ரஹீம் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தனர்.


0 comments:
Post a Comment