மாகும்பர, பன்னல, குளியாப்பட்டிய ஒருங்கிணைக்கப்பட்ட உத்தேச நீர் வழங்கும் கருத்திட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவின் பங்குபற்றுதலுடன் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஓரு இலட்சத்து இருபத்தையாயிரதிற்கும் அதிகமான பாவனையாளர்களின் நலன்கருதி அமைக்கப்பவுள்ள உத்தேச நீர் வழங்கல் திட்டத்திற்காக நூறு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாஓயாவை குறுக்கறுத்து மதிலொன்றைக் கட்டுவதன் மூலம் இத்திட்டத்திற்கான நீர் மூலம் அமைக்கபடவுள்ளது. இதேவேளை இக்கருத்திட்டம் பூர்த்தியடைந்ததும் நாளொன்ருக்கு 25 ஆயிரம் கனமீற்றர் நீரை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, மேலதிகச் செயலாளர் எல்.மங்கலிகா மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment