ஈரான் ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள இலங்கை பணியாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று இலங்கைக்கான வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து அங்கு சென்ற இலங்கை பணியாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக காணப்படுவதாகவும் வெளிநாட்டு வேலைப்பணியகம் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் ஈராக் எல்லைப்பகுதியில் இடம் பெற்ற நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 பேர் எனவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7000 பேர் வரை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது இடம்பெறுவதாகவும் அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment