சம காலத்தில் எந்தவொரு வகையிலும் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பெற்றோல் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்கும் அவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ள அதேவேளை இன்று அறிக்கையினையும் சமர்ப்பிக்கவுள்ளது.எரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான சரத் அமுனுகம, பாட்டலி சம்பிக்க ரணவக்க, னுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
November 14, 2017
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment