கிழக்கு மாகாணக் கல்வியமைச்சும் கல்வித் திணைக்களமும் ஆசிரியர் வெற்றிடம் நிலவுகின்ற பாடசாலைகளை தெரிவு செய்து பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இடமாற்றம் கோரி வர வேண்டாமெனவும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஆளுனர், நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக செல்லுமாறும் கிழக்கு மாகாணம் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருப்பதை தான் விரும்பவில்லையெனவும் கூறியதோடு ஆசிரியர் நிமனம் பெற்றவர்கள் கிழக்கு மாகாணத்தை கல்வியில் முன்னேற்றமடையச்செய்ய முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment