• Latest News

    November 29, 2017

    மனைவியின் பேஸ்புக் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் - கோபத்தால் கொடூரமாக முகத்தை சிதைத்த கணவன்

    முகநூலில்,  தமது புகைப்படத்திற்கு  மனைவி அதிகம் லைக் வாங்கியதால் கோபம் கொண்ட அவரது கணவர் முகத்தை கொடூரமாக சிதைத்துள்ள சம்பவம் ஒன்று  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முகநூலில்  மனைவி  அதிகம்  லைக்  வாங்கியதால்  அவரது  முகத்தைச்  சிதைத்த  கணவர் !

    உருகுவே நாட்டில்,  அஸன்சியன் பகுதியில் குடியிருக்கும் 21 வயதுடைய அடோல்வினா கமலி ஒர்றிகோஸா (Adolfina Camelli Ortigoza)  என்பவர் பேஸ்புக்கில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    தம்மை விட தமது மனைவி பேஸ்புக் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாத கணவர், மனைவி பேஸ்புக்கில் பெறும் ஒவ்வொரு லைக்குகளுக்கும் முகத்தில் கொடூரமாக தாக்கியதால்,  குறித்த இளம்பெண்ணின் முகத்தை சிதைக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

    அது மட்டுமின்றி படுகாயம் அடைந்த அவரை அறைக்குள் இட்டு பூட்டியும் வைத்துள்ளார்.

    வலியால் வாய்விட்டு கதறாமல் இருக்க, தாக்குவதற்கு முன்னர் மனைவியின் வாய்க்குள் துணியை அடைத்து வைத்து தாக்கியுள்ளார்.

    இச்சம்பவம்  குறித்த இளம்பெண்ணின் தோழிக்கு தெரிய வரவே, அவர் அளித்த முறைப்பாட்டினையடுத்து,  வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த  குறித்த  இளம்பெண்ணை பொலிஸார் மீட்டுள்ளனர்.

    பொலிஸாரால் மீட்க்கப்படும்போது அவரது உதடுகள் பலமாக  காயப்பட்டதால், முகமானது, உருவம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து,  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

    நீதிமன்ற விசாரணையில், கணவரின்  குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மனைவியின் பேஸ்புக் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் - கோபத்தால் கொடூரமாக முகத்தை சிதைத்த கணவன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top