அடுத்த மாதம் 12ம் திகதி ஆரம்பமாகும் G.C.E சாதாரண தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்தத்தி செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவிக்கையில் இம்முறை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நான்கு இலட்சத்து 14 ஆயிரத்து 94 பேர் தோற்றுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் 14 ஆயிரத்து 799 பேர் தோற்றுகின்றனர். இதற்கமைவாக பரீட்சைக்கு தோற்றும் மொத்த பரீட்சையாளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 24 ஆயிரத்து 493 பேர் என்றார்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 80 பேர் ஆவர். நாடு முழுவதும் ஆயிரத்து 516 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. ஆயிரத்து 23 இணைப்பு மத்திய நிலையங்கள் செயற்படும். கபொத சாதாரண பரீட்சை எதிர்வரும் 21ம் திகதி நிறைவடையவுள்ளது
0 comments:
Post a Comment